ஆயிரம் “கர்ணன்” வந்தாலும் இந்த “அசுர பரம்பரை” அரசியலை மாற்றுவது கடினம் தான் – ரசிகரின் பதிவுக்கு மோகன் பதில்

0
6610
rudra
- Advertisement -

திரௌபதி பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது.

-விளம்பரம்-

திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன்.இந்த படத்தில் குக்கு வித் கோமாளி தர்ஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனன், ராதாரவி மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் பாருங்க : ஆமா, கபிலா, பாக்சிங்கே உலகம்னு இருந்துட்டேன் – ஆர்யாவின் வாத்தியார் மீம்ஸ்க்கு பசுபதி கொடுத்த செம பதில்.

- Advertisement -

இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் மத மாற்றம், ஜாதி வெறிக்கு எதிரான வசனங்கள் என்று இடம்பெற்று இருந்தது. இந்த ட்ரைலர் குறித்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டரில் ஒருவர், பேச பயப்படும் அரசியலை ருத்ரதாண்டவம் பேசி இருக்கு. ஆனால் அதை பாராட்டா பயப்படும் ஒரு கும்பல், அதை பாராட்டினா அதுலயும் அரசியல் செய்யும் அதே கும்பல்.

This image has an empty alt attribute; its file name is 2-63-1024x603.jpg

ஆயிரம் “கர்ணன்” வந்தாலும் இந்த “அசுர” “பரம்பரை” அரசியலை மாற்றுவது கடினம் தான். இதுல நீங்க ஜெயசீட்ங்க என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த மோகன், தனிப்பட்ட முறையில் பல பிரபலங்கள் வாழ்த்து சொல்லிட்டாங்க.. பொது தளங்களில் வாழ்த்த தயக்கம் இருப்பது உண்மைதான்.. இந்த நிலை போக போக மாறும்.. உண்மை நிதானமாகதான் வெளிவரும் சகோ.. உங்களுக்கு பெரும் நன்றி என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement