அதுக்கு அடுத்த நாள் தான் நான் ஆபீஸ் போய் பார்த்தேன் – மாஸ்டர் ட்ரைலர் குறித்து பேசிய மாளவிகா மோகனன்.

0
923
malavika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது.

-விளம்பரம்-

கடந்த ஏப்ரல் மாதமே படம் ரிலீஸ் ஆக வேண்டியது.கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள், ரிலீஸ் தேதி எல்லாம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா லாக்டவுனால் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். மேலும், மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கபட்டது.

- Advertisement -

அதே போல இந்த படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் விஜய்யின் முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த மாஸ்டர் பிரபலங்கள் பலரும் ஹாஹா ஓஹோ என்று பாராட்டி வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாஸ்டர் பட மாளவிகா மோகனன் பேசுகையில், இசை வெளியிட்டு விழாவின் அடுத்த நாளில் ஆபீசுக்கு சென்று ட்ரைலரை பார்த்தேன். அவ்வளவு சூப்பராக இருந்தது, புல் மாஸ், கண்டிப்பாக ட்ரைலரை பார்த்தால் சிலிர்த்து விடுவீர்கள் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, மாஸ்டர் படத்தின் ட்ரைலர் குறித்து பேசிய அர்ஜுன் தாஸ், ட்ரைலரை 6 தடவ பார்த்துட்டேன், மரண மாஸா இருக்கு. அதுவும் விஜய் சார் படத்தில் ஒரு டைலாக் சொல்வார் அது ரசிகர்களை நிச்சயம் கவரும். மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி உறுதி செய்யபட்டுள்ளது. அதனை படத்தின் தயாரிப்பாளர் விரைவில் வெளியிடுவார். ரசிகர்கள் காத்திருப்பிற்கு இது ஒர்த்தாக இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement