லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
https://www.youtube.com/watch?v=jk8_7PmKPBw&feature=emb_title
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பாருங்க : விஜய் சீரியஸா பேசினு இருக்க கௌரி கிஷன் என்ன பன்றார் பாருங்க - இதனால் தான் இந்த சீன தூக்கிட்டாரா லோகேஷ்
ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 4.50 நிமிட டெலீடட் வீடியோவை அமேசான் நிறுவனம் நேற்று (பிப்ரவரி 6) வெளியிட்டது. ஏற்கனவே படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பல காட்சிகளை கட் செய்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
https://twitter.com/thalpathykrish/status/1358079315343069187
இந்த வீடியோவில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும். அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூற, அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார்.
https://twitter.com/thalapathyfan96/status/1358078315693830149
ஆடை பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்து மீறல்களை பற்றி சொன்ன இந்த காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல சிலர் சிவகாசி படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை இந்த காட்சியோடு ஒப்பிட்டு வருகின்றனர். மேலும், சிவகாசி படத்தில் விஜய் பெண்கள் அணியும் ஆடை பற்றி பேசியதை விமர்சித்த சிலருக்கு மாஸ்டர் படத்தில் விஜய் பதிலடி கொடுத்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.





