தளபதி விஜய் படத்தில் கமிட் ஆன மாஸ்டர் பட பிரபலம் – யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.

0
2259
vijay65
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படித்திருந்தாலும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.இருப்பினும் வசூல் ரீதியாக இந்த படம் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டு இருந்தனர்.

- Advertisement -

இந்த படத்தை இயக்க இருக்கும் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். அதுபோக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தையும் இயக்கி வருகிறார்.தளபதி 65 படத்தை நெல்சன் இயக்குனராகவும் மற்றும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த தகவலைத் தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் பூவையர் கமிட் ஆகி இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்த ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், சென்னை பாஷை பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து வரும் குழந்தை நட்சத்திரம் பூவையார் தான். இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு பாடி நடித்ததோடு மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement