முடிந்தது மாஸ்டர் படத்தின் டிவி மற்றும் ஓவர்சீஸ் உரிமம். பிகில் படம் விலைபோன அதே தொகை.

0
2277
master
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 தாண்டியது மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 1568 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்கள். ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் கொண்டே உள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் எல்லாம் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

-விளம்பரம்-
master

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிப்பதினால் திரையரங்குகள் திறப்பதற்க்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் திரையரங்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : லாக் டவுன் சமயத்தில் மாடியில் டூ பீஸ் உடையில் போட்டோ ஷூட் நடத்திய துல்கர் பட நடிகை.

- Advertisement -

இந்த நிலையில் மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருக்கின்றனர். இருப்பினும் மாஸ்டர் படத்தின் வியாபாரம் ஒரு புறம் முடிந்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மூத்த தயாரிப்பாளர், இயக்குநர் என்று தமிழ் சினிமாவின் முக்கிய நபரான கேயார் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் கேயார்

அதில், முன்னணி நடிகர்களின் படங்களையும் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஓ.டி.டி நிறுவனங்கள் இறங்கி இருக்கின்றன.ற்போது, அக்‌ஷய் நடிப்பில் நம்முடைய ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் `காஞ்சனா’ படத்தின் ரீமேக் உரிமையை 200- கோடி ரூபாய் வரை வாங்க பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது. மேலும், விஜய் நடித்த `மாஸ்டர்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை 20 கோடி கொடுத்து சன் டி.வி வாங்கிவிட்டது. அடுத்து, `மாஸ்டர்’ படத்தின் ஓவர்சீஸ் உரிமையை 30 கோடிக்கு விற்று விட்டனர்.

இதையும் பாருங்க : அதை தாங்க முடியாமல் இதை செய்தேன் – நீண்ட காலத்திற்கு பின் சுச்சி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த சுசித்ரா.

-விளம்பரம்-

சூர்யா நிறுவனம் தயாரித்து, ஜோதிகா நடித்துள்ள `பொன்மகள் வந்தாள்’ படத்தின் டி.வி உரிமையை 2.5 கோடி கொடுத்து விஜய் டி.வி வாங்கியிருக்கிறது. இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் ஓவர் சீஸ் உரிமமும் 30 கோடிக்கு தான் விற்கப்பட்டது. தற்போது மாஸ்டர் படமும் அதே விலைக்கு ஓவர் சீஸ் வியாபாரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement