அதை தாங்க முடியாமல் இதை செய்தேன் – நீண்ட காலத்திற்கு பின் சுச்சி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த சுசித்ரா.

0
20816
Suchi-Leaks
- Advertisement -

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் பாடகி சுசித்ரா குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சுச்சி லீக்ஸ் போய் ஸ்ரீ லீக்ஸ் வந்தது என்றும் பல விமர்சனம் செய்து வந்தார்கள் நெட்டிசன்கள். சுசித்ரா ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அறியப்பட்டவர் சுசித்ரா. இவர் தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆவார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.

-விளம்பரம்-
தொடர்புடைய படம்

கடந்த 2014 ஆம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து “சுசி லீக்ஸ்” என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, திரிஷா, ஆண்ட்ரியா, சின்மயி, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் சினிமா திரையுலகமே அதிர்ந்து போனது. இதையடுத்து பாடகி சுசித்ரா கூறியது, தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : 90ஸ் காலகட்டத்தில் சத்யராஜ், குஷ்பூ, ரஜினி என்று பல்வேறு படங்களில் சிறு ரோலில் நடித்துள்ள சுந்தர் சி. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

அதிலிருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் என்று கூறி இருந்தார். மேலும்,அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் தன்னுடைய விவாகரத்துக்குப் பிறகு பாடகி சுசித்ரா அவர்கள் தனது குடும்பத்திலிருந்து விட்டு விலகி அடையாரில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து கடந்து சில மாதங்களுக்கு முன்பு அவர் காணாமல் போய் விட்டதாகவும் பரபரப்பு எழுந்தது. ஆனால், அது பொய்யான தகவல் என்று உறுதியானது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சுசித்ரா பேசுகையில், ஒரு பிரேக் தேவைப்பட்டதால் தான் லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன்.

-விளம்பரம்-

‘இப்போது எனது யூடியூப் சேனல் மூலம், நான் சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறேன். சுச்சி லீக்ஸ் பிரச்சனையின் பிரஷர் தாங்க முடியாமல், நான் ஒரு வருடம் லண்டனில் குக்கிங் படித்தேன். அதன் காரணமாகவே இப்போது குக்கிங் வீடியோக்களை பகிர்ந்து வருகிறேன். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுசித்ரா, விஷயத்தில் தேவையில்லாம தனுஷ், அனிருத் எல்லாரையும் சம்பந்தப்படுத்தி விட்டனர். ஆனால், அப்படி வெளியான வீடியோக்கள் ஒன்றைக் கூட நான் இன்னும் பார்க்க கூட இல்லை. அந்த வீடியோக்கள் மார்ஃபிங் செய்யப்பட்டதா என்று கூட எனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement