உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : அதை தாங்க முடியாமல் இதை செய்தேன் – நீண்ட காலத்திற்கு பின் சுச்சி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த சுசித்ரா.
திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல மலையாள பட நடிகை ஷவுன் ரோமி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது ஹாட் ஸ்டில்ஸை ஷேர் செய்த வண்ணமிருக்கிறார். தற்போது, நடிகை ஷவுன் ரோமி இன்ஸ்டாகிராமில் புதிதாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
பிகினி உடையில் ஷவுன் ரோமி கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இவர் மலையாளத்தில் ‘நீலகாஷம் பச்ச கடல் சுவன்ன பூமி, கம்மட்டி பாடம், சந்திரகிரி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘கம்மட்டி பாடம்’ என்ற படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஷவுன் ரோமி நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை ஷவுன் ரோமியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.