சார்பட்டா படத்தை பார்த்துவிட்டு சூர்யா போட்ட ட்வீட் – ஏமாற்றத்தில் புலம்பிய ரசிகர்கள். ஏன் தெரியுமா ?

0
7993
surya
- Advertisement -

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் தவறவிட்ட படத்தை வேறு ஒரு நடிகர் நடிப்பது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படமும் விதிவிலக்காக அமையவில்லை. கடந்த 22 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்தில் அனைவரின் கதாபாத்திரமும் பாரட்டப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அதே போல இந்த படத்தில் ஆர்யாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்த படத்தில் நடிக்க ஆரம்பத்தில் பல்வேரு நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் சூர்யாவும் ஒருவர். இந்த படம் வெளியாவதற்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரஞ்சித்திடன் ‘சார்பட்டா பரம்பரை’ படம் சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையா என்று கேள்வி கேட்டகப்பட்டது.

இதையும் பாருங்க : தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக கிளைமாக்ஸை நீங்கள் முடிவு செய்யலாம். அதிரடி காட்டிய ஜீ தமிழ்.

- Advertisement -

அதற்கு சிரித்துகொண்டே பதில் அளித்த ரஞ்சித், இந்த படத்திற்காக பல பேரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது சூர்யா உட்பட எனக்கு ஆர்யாவை மெட்ராஸ் பட சமயத்தில் இருந்தே தெரியும். அவர் என்னிடம் தனக்காக ஒரு கதையை தயார் செய்யுமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால்தான் இந்த படம் மூலமாக நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை கூறியுள்ள சூர்யா, சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டீர்களே என்று புலம்பி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் இந்த படத்த Reject பண்ணிட்டு Tsk நடிச்ச பாத்தியா என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement