பொங்கல் முன்னிட்டு தளபதி ரசிகர்களுக்கு நாளை செம ட்ரீட். மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்.

0
1930
master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாகவும், ஜாம்பவானாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பையும், வசூலையும் அள்ளி தந்து உள்ளது. இதனையடுத்து மாநகரம், கைதி படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய்யை வைத்து “மாஸ்டர் 64” படத்தை இயக்கி வருகிறார். விஜய் அவர்கள் நடிக்கும் “மாஸ்டர் ” படத்தின் பெயர் குறித்து கடந்த சில காலமாக எந்த ஒரு அதிகார பூர்வகமாக எந்த தகவலும் வரவில்லை.

-விளம்பரம்-
Image

மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மேலும், தளபதி விஜய் அவர்கள் ஜனவரி 1வது வாரம் தொடங்கி 3வது வாரம் வரை சென்னையின் பிரபல ஸ்டுடியோவில் நடைபெறும் இந்த படத்தின் பட்டபிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும், இப்பட த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 31 ஆம் தேதி வெளியாகி இருந்தது. . அதோடு இந்த படத்தின் செக்கண்ட் லுக் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியானது. ஆனால், எதிர்பார்த்தபடி செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை (ஜனவரி 15) மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்று மாஸ்டர் படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும், இந்த செக்கண்ட் லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement