பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘மாஸ்டர்’ படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார்.
விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
மேலும், இந்த படத்திற்கான பஸ்ட் லூக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பஸ்ட் லூக் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா. அதேபோல அடுத்தடுத்து வந்த செகண்ட் லுக் மற்றும் தேர்ட் லுக் போஸ்டர்கள் படுமாஸாக இருந்தது.அதே போல இந்த படத்தின் மூன்றாவது போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருக்கும் மாஸான போஸ்டரும் வெளியானது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டரில் வந்த அதே போஸ்டர் போல தமிழில் சித்தார்த் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது. அதில் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் போலவே இருக்கும் ஒரு போஸ்டர் அந்த காட்சியில் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சியின் புகைப்படம்.