மாஸ்டர் படத்தில் விஜய் ப்ரெபசர் இல்லையா ? வைரலாகும் விஜய்யின் ஐடி கார்டு.

0
7782
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

-விளம்பரம்-
master

இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு தான் ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ், சாந்தனு, சேத்தன்,கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஷோபா, சந்திரசேகர், அனிருத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

ஆனால், ரசிகர்களால் மட்டும் தான் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருநாதர்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் மாஸ்டர் படத்தில் நடத்த பல பிரபலங்கள் பேசினார்கள். மேலும்,இசை வெளியிட்டு விழா முடிந்தும் சோசியல் மீடியாவில் மாஸ்டர் படம் பற்றிய பேச்சுக்கள் தான் போய்க் கொண்டு உள்ளது. மேலும், இப்படத்தின் டிரைலர் இந்த மாதம் 22 ஆம் தேதி வெளி வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Master

தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டு இருப்பது ஒரே ஒரு விஷயத்திற்காக தான். அது என்னவென்றால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போ என்று தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், படக்குழுவினர் திட்டமிட்டபடி படத்தை ஏப்ரல் 9 ஆம் தேதி வெளிவராது என்றும் கூறப்படுகின்றது.

-விளம்பரம்-

இதற்கு காரணம் தற்போது திரையரங்குகள் எல்லாம் மார்ச் 31ம் தேதி வரை கரோனா வைரசினால் மூடப்பட்டு உள்ளது என்பது தான். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் உபயோகப்படுத்திய ஐடி கார்டு ஒன்று டுவிட்டரில் வெளியாகி உள்ளது.

அந்த ஐடி கார்டில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் ஜான் துரைராஜ் என்றும் St. JEFFERY’S காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்றும் உள்ளது. இந்த ஐடி கார்ட்டில் நடிகர் விஜய் மாணவரகளின் டீன் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

Advertisement