விபத்தில் சிக்கிய லியோ படத்தின் விஜய் மகன் குடும்பத்தினர். குடும்ப நபர் இழப்பு.

0
524
- Advertisement -

பிரபல நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் மேத்யூ தாமஸ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கும்பலாங்கி நைட்ஸ் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தண்ணீர் மாத்தான் தினங்கள், அஞ்சாம் பத்திரா, ஆபரேஷ் ஜாவா, ஒன், ஜோ அண்ட் ஜோ, பிரகாஷன் பரக்கட்டே, விஷூதா மேஜோ, கிறிஸ்டி , நெய்மர், பேமிலி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் மலையாள மொழியில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார். பின் இவர் தமிழில் சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த லியோ படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மேத்யூ தாமஸ் குறித்த தகவல்:

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா உட்பட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. மேலும், இந்த படத்தில் விஜயின் மகனாக மேத்யூ தாமஸ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து இவர் தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மேத்யூ தாமஸ் குடும்பம்:

இது மட்டும் இல்லாமல் இவர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் மேத்யூ தாமஸின் தந்தை பிஜூ, தாய் சூசன், அண்ணன் ஜான் மற்றும் இவர்களுடைய உறவினர் பீனா டேனியல், அவருடைய கணவர் சஜூ ஆகியோர் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேதத்திற்கு சென்று இருந்தார்கள். பின்பு விசேஷம் முடிந்து காரில் வீடு திரும்பி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விபத்தில் சிக்கிய குடும்பம்:

அப்போது எதிர்பாராத விதமாக இரவு ஒரு மணி அளவில் சாஸ்தாமுகல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி இருக்கிறது. அப்போது இந்த காரை ஓட்டி வந்தவர் மேத்யூ தாமஸின் அண்ணன் ஜான் தான். இந்த விபத்தில் அதிக அளவில் சேதமடைந்ததால் சம்பவ இடத்திலேயே பீனா என்பவர் உயிரிழந்தார். இவருக்கு 61 வயது தான். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். மேலும், காரில் இருந்த மற்ற அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

போலீஸ் விசாரணை:

இவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுபவித்து இருக்கிறார்கள். பின் போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்துக்கு காரணமான ஜான் இடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் மேத்யூ தாமஸ் இடம் நலம் விசாரித்தும், ஆறுதல் கூறியும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவருடைய ரசிகர்கள் கூடிய விரைவிலேயே மேத்யூ தாமஸின் குடும்பம் நலம் பெற்று வர வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்து வருகிறார்கள்.

Advertisement