பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாயா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவரது நடப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தது. இதை அடுத்து கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் சில காட்சியில் மாயா நடித்திருந்தார்.
இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மாயாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் நாட்கள் செல்ல செல்ல இவருடைய செயல்கள் கடுப்பை ஏற்றி இருந்தது. மற்ற போட்டியாளர்களை கிண்டல், கேலி செய்வது, குரூப் பார்ம் செய்து கொண்டு மற்றவர்களை தாக்கி பேசுவது போன்ற பல காரணங்களால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு உண்டானது. இருந்தாலும், இவர் தாக்குப் பிடித்து டாப் 5ல் வந்தார்.
பிக் பாஸ் மாயா:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மாயாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு மாயாவிற்கு கிடைத்து இருக்கிறது. Yannick Ben என்பவர் இயக்கத்தில் உருவாகும் புது படத்தில் தான் மாயா நடிக்க இருக்கிறார். Yannick Ben ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, மாவீரன், வெந்து தணிந்தது காடு, ஜவான் போன்ற படங்களில் எல்லாம் ஒளிப்பதிவாளராக இருந்தார். தற்போது இவர் புதுப்படம் ஒன்றை இயக்குகிறார்.
மாயா குறித்த தகவல்:
இந்த படத்தில் தான் மாயா அவர்கள் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் விவாகரத்து தொடர்பாக பிக் பாஸ் மாயா போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாகவே சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது.
மாயா பதிவு:
அந்த வகையில் சமந்தா-நாக சைதன்யா, தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து பலருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் நிறைய பிரபலங்கள் விவாகரத்து செய்து இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ், ரவி மோகன் உட்பட பல பிரபலங்கள் விவாகரத்து செய்து இருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் சிலருக்கு சோசியல் மீடியாவில் மீம் கண்டன்டுகளாக திகழ்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் மாயா அவர்கள் பிரபலங்களின் விவாகரத்து குறித்து காமெடியாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
தனுஷ்-நயன்தாரா குறித்து சொன்னது:
அதில் அவர், போன வருஷம் ரகுமான் விவாகரத்து நடந்தது, ஜிவி பிரகாஷ் விவாகரத்து நடந்தது. ஜெயம் ரவி இல்லை ரவி மோகன் விவாகரத்து செய்தார். தனுஷ் – நயன்தாரா விவாகரத்து நடந்தது. தனுஷ், விவாகரத்து இல்லை. வேற என்னன்னு எனக்கு தெரியும் என்று அப்படியே மாற்றிவிட்டார். இப்படி மாயா நகைச்சுவையாக பேசி வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ்-நயன் இடையே நடக்கும் சர்ச்சை அனைவரும் அறிந்ததே.