80ஸ்லயே ஹோட்டல்க்கு சாப்பிட போன நாங்க ஒரு ரூபா டிப்ஸ் வச்சா அவர் இவ்ளோ வைப்பார் – மயில்சாமி குறித்து லக்ஷ்மணன்.

0
644
mayil
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவர் மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகம் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவரும் நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பர் லட்ச்மணன் ஒரு பேட்டியில் மறைந்த அவரை பற்றிய சுவாரசிய தகவல்களை கூறியிருந்தார். பேட்டியில் பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்த அவர் கூறியதாவது “நாங்கள் ஒருமுறை ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தோம், பொதுவாக 80ஸ் காலங்களில் சர்வருக்கு டிப்ஸ் ஓன்று அல்லது இரண்டு ரூபாய் தான் வைப்பார்கள். ஒரு ரூபாய் வைத்தாலே அது பெரியது. அப்படிப்பட்ட நிலையில் அவர் மட்டும் 10 ரூபாய் வைப்பார். இதனால் சுற்றியிருக்கும் நபர்கள் இவரை என்ன சர்வருக்கு 10ரூபாய் வைக்கிறார் என்று குறுகுறுவென்று பார்ப்பார்கள்.

- Advertisement -

சர்வர் டிப்ஸ் எடுத்துவிட்டு சென்ற பிறகு அதற்கு மயில்சாமி காரணமும் ஒருமுறை கூறியிருக்கிறார் “அதவாது நானும் ஒரு சர்வராக இருந்தது தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் எனவே எனக்கு சர்வரின் வேலை பற்றிய கஷ்டம் தெரியும். நாம் எவ்வளவு சம்பாரித்தாலும் அதனை அப்படியே வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதனை கொடுக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி. அதோடு இதனை யாருக்கு வழங்குகிறோம், அவருக்கு உதவியாக இருந்ததா? என்று சொல்ல முடியாது ஆனால் அந்த நாள் அவர்கள் மிகவும் மகிச்சியாக இருப்பார்கள்.

அந்த மகிழ்ச்சி போதும், அதோடு நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் அவரை பார்த்துதான் நான் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன் என எப்போதுமே கூறுவார். இதே போல ஒருமுறை மயில்சாமி எங்களுடைய இசை ட்ரூபில் பணியாற்றி வரும் போது அவருக்கு 250 ரூபாய் தான் சம்பளம், ஆனால் ஆட்டோக்கு 300 ருபாய் கொடுப்பார். ஆட்டோவிற்கு 100 முதல் 150 ரூபாய் வரையில் தான் ஆகியிருக்கும் ஆனால் 300 ரூபாய் கொடுப்பர். அவர் எதற்கு கொடுக்கிறார் ஏற்று நான் இதுவரையில் கேட்டதில்லை.

-விளம்பரம்-

ஆனால் ஒருமுறை என்னிடம் என்னடா மச்சா பாக்குற? என்று கேட்டுவிட்டார். அதற்கு பிறகு தான் ஏன் கொடுக்கிறேன் என்று விளக்கமும் கூறுவார். அந்த குணம் யாருக்குமே வராது. சில நேரங்களில் அவரிடம் பணம் இல்லையென்றால் கூட பக்கத்து வீட்டிலோ அல்லது தன்னுடைய நண்பர்களிடமோ கேட்டு உதவி செய்வார். அவருக்கு பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேட்பார். மயில்சாமி பொதுவாக பணம் கேட்க மாட்டார், அவர் அப்படி கேட்டால் முக்கியமான விஷயம் என்பதை அறிந்து கொண்டு எதுவும் கேட்காமல் கொடுத்து விடுவேன்.

ஆனால் என்னையும் அவருடன் அழைத்து சென்று யாருக்கு உதவி தேவை படுகிறதோ அவருக்கு தேவயானவற்றை வாங்கி என் முன்னர் தான் கொடுப்பார். அவர் அப்படி கொடுக்கம் போது நான் யோசிப்பேன். இவரிடமே பணம் இல்லை என்று கூறுகிறார். இவர் நம்மிடம் வாங்கி மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவசியம் அவருக்கு கிடையாது. இல்லை என்று சொல்லலாம் அல்லது பிறகு உதவி செய்கிறேன் என்று கூறலாம். ஆனால் உடனடியாக உதவி செய்யும் அந்த மனப்பான்மை அவரிடம் எப்படி வந்தது என ஆச்சரியமாக இருக்கும்.

Advertisement