‘உங்களை மீண்டும் இப்படி பாக்கறது சந்தோசமா இருக்கு ‘ – கணவர் மறைவுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த மீனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து மழை .

0
505
meena
- Advertisement -

கணவர் இருந்து சோகத்தில் இருந்து வந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருகிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா இந்த படத்தில் ரஜினி உடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனை அடுத்து பல படங்களில் மீனா கமிட்டாகி இருக்கிறார்.

- Advertisement -

மீனா கணவர் இறப்பு:

இதனிடையே மீனா அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் நைனிகா என்ற மகள் இருக்கிறார். மீனாவின் மகளும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

சோகத்தில் இருந்து மீண்டு வரும் மீனா :

மீனாவிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம்.மீனாவை இந்த இழப்பில் இருந்து மீட்டு வரும் முயற்சியில் அவருடைய நண்பர்களும் இருந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனா தேறி வருகிறார். சமீபத்தில் தான் மீனா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடு இருந்தார். பிறகு நடிகை மீனா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்று இருந்தார்.

-விளம்பரம்-

மீண்டும் படப்பிடிப்பில் மீனா:

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மீனா மனம் தேற்றி வருகிறார். சமீபத்தில் தான் சினிமா படப்பிடிப்புகளிலும் மீனா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படி ஒரு நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தது மேக்கப் போட்டுகொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மீண்டும் மீனா பழைய நிலைக்கு திரும்பியதை கண்டு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement