உடைந்து நின்ற மீனா, 11 வயதில் தந்தைக்கு இறுதி சடங்கு செய்த மகள் – இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது.

0
1373
meena
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் மீனாவின் கணவர் இறந்துள்ள சம்பவம் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகை மீனா மற்றும் வித்யாசாகர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மேலும், திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் பிறந்தனர். நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். திருமணத்திற்கு பின்னரும் நடிகை மீனா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் இறந்து உள்ள தகவல் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த போது ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கொரோனா தொற்று :

அதாவது பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது.அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பிரச்சனை வித்யாசாகருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது.

உடல் உறுப்பு கிடைப்பதில் தாமதம் :

இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆரம்பத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள். அதற்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து நுரையீரல் தானம் கிடைக்கறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மீனாவின் கணவர் இறப்பு:

ஆனால், உறுப்புக்கள் கிடைப்பதில் தாமதமானதால் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம் என்று முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் நாளுக்கு நாள் வித்யாசாகர் உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில் இவர் காலம் ஆகி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் மீனாவின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இறுதி சடங்கு செய்த மகள் :

இப்படி ஒரு நிலையில் வித்யாசகரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்று வருகிறது. அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இவரின் இறுதி சடங்கில் மீனா மற்றும் அவரது மகளும் கண்ணீர் மல்க இறுதி சடங்கை செய்தனர். அதிலும் 11 வயதே ஆன மீனாவின் மகள் பேபி நைனிகா தனது தந்தைக்கு இறுதி சடங்கை செய்யும் வீடியோவை பார்க்கும் போது நமக்கே கண்ணீரை வரவைக்கிறது.

Advertisement