முல்லை பெரியார் அணைய இடிக்க சொன்ன உங்க படத்தை தமிழ் மக்கள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பீங்க – ரிப்போர்ட்டர் கேள்விக்கு பிரித்திவிராஜ் சொன்ன பதில்.

0
944
prithviraj
- Advertisement -

முல்லை பெரியார் அணைக்கு எதிராக ட்வீட் போட்ட உங்க படத்தை தமிழ் நாட்டில் எப்படி பார்க்கப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் மலையாள நடிகர் பிரித்திவிராஜ். மலையாள சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் பிரிதிவிராஜ். இவர் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே, ராவணா, மொழி போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மலையாளத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. தற்போது இவர் கடுவா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரித்விராஜ் புரடொக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை,திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : முல்லை பெரியார் அணைய இடிக்க சொன்ன உங்க படத்தை தமிழ் மக்கள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பீங்க – ரிப்போர்ட்டர் கேள்விக்கு பிரித்திவிராஜ் சொன்ன பதில்.

பரித்விராஜ் நடித்த கடுவா :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த, பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, விடிவி கணேஷ், நடிகர்கள் ஆர்யா, ஜீவா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

பத்திரிகையாளர் கேட்ட கேள்வி :

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ‘கடந்த ஆண்டு நீங்கள் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தீர்கள். அப்போது தமிழர்கள் பலர் உங்களுக்கு எதிராக பதிவிட்டு இருந்தார்கள். அப்படி இருக்கையில் எப்படி கடுவா படத்திற்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரித்திவிராஜ் ‘மிகவும் சுவாரஸ்யமான கேள்வி, நான் இப்போது அந்த கேள்விக்கு பதில் அளித்தால் இந்த மொத்த பிரஸ் மீட்டின் தலைப்பு அதுவாக தான் இருக்கும். நான் இங்கு வந்தது கடுவா படத்தின் ப்ரோமோஷனுக்காக தான எனவே அதைப் பற்றி பேசலாம் என்று மழுப்பலாக பதில் கூறி எஸ்கேப் ஆனார்’

முல்லை பெரியார் அணை பிரச்சனை :

கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த கனமழையால் பெய்த போது முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இதனால் அணையை திறந்துவிட்டால் கேரளாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கேரள மக்கள் பலரும் #decommissionMullaperiyardam என்ற ஹேஷ் டேக்கை போட்டு 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லை பெரியார் அணையை இடிக்க வேண்டும் என்று கண்டனம் போட்டனர்.

பிரித்விராஜ் போட்ட சர்ச்சை ட்வீட் :

இப்படி ஒரு நிலையில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி இதை ஆதரித்து பிரித்திவிராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழைமையான இந்த அணை ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பாக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, எது சரியோ அதைச் செய்யவேண்டிய நேரம் இது’ என்று பதிவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement