அஜித் காலை கழுவி, தொட்டால்தான் அந்த நடிகர்களுக்கு புத்தி வரும்..! பிரபல நடிகை சர்ச்சை பேச்சு

0
288

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அஜித், நடிப்பை தாண்டி ஒரு சிறந்த மனிதர் என்று பல்வேறு பரபலங்களும் கூறியுள்ளதை பலமுறை நாம் கேள்விபட்டிருக்கிறோம்.

ajith

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து மீனா என்ற தெலுங்கு நடிகை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்பாடியுள்ளார். நடிகர் அஜித், தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் “விஸ்வாசம்” படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்துள்ள தெலுங்கு நடிகை மீனா, அவருடன் புகைப்படம் எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் அஜித்தை போல ஒரு மனிதரை வாழ்நாளில் பார்த்தது இல்லை. மிகவும் இனிமையான, தன்னடக்கமான ஒரு நபர். ஒரு ஹிட் படம் கொடுத்தால் அலட்டிக் கொள்ளும் பல நடிகர்களை நான் பார்த்துள்ளேன்.

அது போன்ற ஆட்கள் அஜித்தின் காலை கழுவி ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்படியாவது அவரது குணத்தில் ஒரு 10 சதவீதமாக பெறுவீர்கள். தலை வணங்குகிறேன் தல என்று நடிகர் அஜித்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.