அந்த தண்ணியில் குளிக்க மாட்டேன், தொட்டி முழுதும் மினரல் வாட்டர் நிரப்புங்க – பிரசாந்த் படத்தில் பிரச்சனை செய்த நடிகை. இன்னிக்கி ஆள் அட்ரஸ்ஸே இல்ல.

0
649
Prasanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். இவர் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன். இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். பின் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது. மேலும், 90 காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட இவருக்கு ஏகப்பட்ட மவுஸ் இருந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்து இருக்கிறது. பின் இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியதால் பிரசாந்த் இடம் தெரியாமல் காணாமல் போனார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார். பின் இவர் ‘சாகசம்’ படம் மூலம் மீண்டும் சினிமா உலகில் ரீ எண்ட்ரி கொடுத்து இருந்தார். தற்போது இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் ஜாம்பவான் படத்தின் போது படப்பிடிப்பிலிருந்து நடிகை நிலா வெளியேறியதற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஜாம்பவான் படம்:

பிரசாந்த் நடிப்பில் இயக்குனர் நந்தகுமார் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜாம்பவான்.
இந்த படத்தில் பிரசாந்த், மீரா சோப்ரா, மேக்னா நாயுடு, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் போது படப்பிடிப்பிலிருந்து நிலா வெளியேறியதற்கான காரணத்தை குறித்து பேட்டியில் இயக்குனர் கூறியிருப்பது, ஜாம்பவான் படத்தின்போது பிரஷாந்திற்கு முதுகில் பலமாக அடிபட்டு இருந்தது. தோலில் ரத்தம் ஒழுக ஒழுக அதையும் பொருட்படுத்தி கொண்டு பிரசாந்த் நடித்து இருந்தார்.

இயக்குனர் அளித்த பேட்டி:

நாங்கள் எல்லோரும் பயந்து விட்டோம். ஆனால், பிரசாந்த் ஒன்றுமில்லை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். ஆனால், நடிகை நிலா செய்திருந்தது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த படத்தில் ஒரு காட்சியில் குற்றாலம் பக்கத்தில் இருக்கும் தொட்டி தண்ணியில் குளிக்கும் மாதிரி காட்சி எடுக்க இருந்தது. அப்போது அந்த தண்ணீரில் நான் குளிக்க மாட்டேன், எனக்கு அலர்ஜி ப்ரச்சனை ஏற்படும். அதனால் எனக்கு மினரல் வாட்டரில் அந்தத் தொட்டியை நிரப்புங்கள் என்று நிலா சொல்லி இருந்தார். அந்த தொட்டி ஒரு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.

-விளம்பரம்-

படப்பிடிப்பை விட்டு சென்ற நிலா:

அப்போதெல்லாம் மினரல் வாட்டர் கொண்டு வந்து நிரப்புவது சாத்தியமில்லாத ஒன்று. உடனே கதாநாயகி என்னால முடியாது நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சென்றுவிட்டார். தயாரிப்பாளர், நாங்கள் எல்லோரும் பேசியதற்கு என்னை டார்ச்சர் செய்கிறார்கள், என்னை கார்னர் பண்ணுகிறார்கள் என்று பேட்டி அளித்து விட்டு டெல்லிக்கு சென்றுவிட்டார் நிலா. என்ன செய்வது என்று புரியாமல் நாங்கள் படப்பிடிப்பை நிறுத்தி விட்டோம். 20 நாள் முடிந்த படப்பிடிப்பு இன்னும் 20 நாள் இருந்தது. வேறு நடிகை போடலாம் என்று நினைத்தாலும் அதுக்கு வேறு ஒரு படமே எடுத்துவிடலாம்.

நிலா போட்ட கண்டிஷன்:

அந்த அளவிற்கு செலவாகிவிட்டது. மேலும், விவேக் என்ன சார் இந்த பொண்ணு இப்படி பண்ணுது. ஐஸ்வர்யா ராயே எதுவும் சொல்லாமல் நடித்து தருகிறார் என்று சொன்னார். பிரசாந்தின் அப்பா தியாகராஜன் டெல்லிக்கு சென்று நிலாவிடம் பேசப் போய் இருந்தார். பின் படத்தைப் பற்றி எடுத்து சொல்லி நிலவிற்கு புரிய வைத்தார். அவரும் சரி நான் நடிக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டார். அதற்கு பிறகு மொத்தமாக பாடல்கள் எல்லாம் பாரினில் சூட் பண்ணி இருந்தோம். அப்படித்தான் அந்த படம் உருவானது என்று கூறியிருந்தார்.

Advertisement