தமிழ் சினிமாவை பொறுத்த வரை அழகும், திறமையும் தாண்டி லக் என்ற விஷயமும் அமைந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்பது ஆணித்தனமான உண்மை. சினிமாவில் அறிமுகமான அழகான நடிகைகள் சிறிது காலத்திலேயே காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் இவரும் ஒருவர். தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே அருயிரே. அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை நிலா. ஆனால் இவரது இயற்பெயர் மீரா சோப்ரா.

டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தை சார்ந்தவர். பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா,மனாரா சோப்ரா ,பரிநிதி சோப்ரா ஆகியோருக்கு கசின் ஆவார். இவ்வளவு பிரபலங்களின் சகோதரியாக இருந்தும் இவரது சினிமா வாழ்விற்கு யாரும் உதவ வில்லை. சமீபத்தில் கூட ஒரு விழா ஒன்றுல் பங்கேற்ற பரிநிதி சோப்ரா மீரா சோப்ரா என்னோடய கசிநே இல்லை இன்று கூறினார்.

இதையும் பாருங்க : 3 பக்கத்தில் ரத்தத்தால் கடிதம், இரண்டாம் திருமணம். நீண்ட இடைவெளிக்கு பின் பேட்டி அளித்த பூஜாவின் முன்னாள் கணவர்.

Advertisement

தமிழில் மருதமலை, ஜாம்பவான், லீ என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இருப்பினும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவும் இல்லை பட வாய்ப்புகள் அதிகம் வரவும் இல்லை. இறுதியாக எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த இசை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் கில்லாடி படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் போட்ட பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதில், தந்தை போலீஸ் காலனி பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த இரண்டு நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதுதான் டெல்லியின் பாதுகாப்பு நிலை” என்று பதிவிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதை டேக் செய்திருந்தார்.மற்றொரு ட்வீட்டில் டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்திருக்கும் மீரா சோப்ரா, “எது திருடு போனது என்பது முக்கியமல்ல. நம் வீட்டுப் பெரியவர்களை பாதுகாப்பதுதான் முக்கியம். வடக்கு டெல்லி காவல்துறைக்கு எனது வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement