3 பக்கத்தில் ரத்தத்தால் கடிதம், இரண்டாம் திருமணம். நீண்ட இடைவெளிக்கு பின் பேட்டி அளித்த பூஜாவின் முன்னாள் கணவர்.

0
17908
criag
- Advertisement -

இசை ரசிகர்கள் அனைவரும் FM ஸ்டேஷனுக்கு போன் செய்து தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் டிவி நிகழ்ச்சியில் வீடியோ ஜாக்கி என்று அறிமுகம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது எஸ்எஸ் மியூசிக் தான். சன்மியூசிக் தொடங்குவதற்கு முன்பாகவே துவங்கப்பட்ட இந்த தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என்று பல்வேறு விதமான மொழிகளின் பாடல்களும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வி ஜெக்கள் தொகுத்து வழங்கினார்கள்.

-விளம்பரம்-
Pooja Ramachandran with her Husband Craig | Veethi

தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான வீடியோ ஜாக்கிகள் பிரபலமானவர்கள் அதில் மிகவும் பிரபலமானவர் வி ஜே கிரேக். பப்லியான தோற்றம், சேட்டு தமிழ், சரளமான ஆங்கிலம் என்று இவரது பேச்சிக்கு பலரும் ரசிகரானார்கள். எஸ் எஸ் மியூசிக் சேனலில் ரீச் அவுட், காலேஜ் டா என்று பல்வேறு ஷோக்களை தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

மேலும், கிரேக் பணியாற்றிய பூஜாவை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது. விவாகரத்துக்கு பின்னர் பூஜா படங்களில் நடித்து வருகிறார். மேலும், அதன் பின்னர் பூஜா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கிரேக் என்னவானார் என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கிரேக், பல்வேறு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார் அதில், அந்தப் பேட்டியில் உங்களுக்கு பெண் ரசிகைகள் மிகவும் அதிகம் உங்களுக்கு காதல் ப்ரொபோஸ் வந்திருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு ‘எனக்கு நிறைய வந்திருக்கிறது 3 பக்கத்தில் ரத்தத்தால் கடிதம் எழுதி எனக்கு அனுப்பினார்கள். அதே போல இன்னொருவர் பதிமூன்று பக்கத்தில் ஒவ்வொரு எழுத்தையும் வெவ்வேறுவிதமான வண்ணங்களில் எழுதி அனுப்பினார்கள். மேலும், சிறு வயது முதல் தற்போது இருக்கும் புகைப்படங்களை ஆல்பமாக வைத்தும் அனுப்பினார்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், பேசிய அவர் பலரும் என்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து கேட்கிறார்கள் நான் கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்யப்போகிறேன். இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால், தற்போது இருக்கும் பிரச்சனையில் அதனை ஒத்தி வைத்துள்ளேன். நான் பணியாற்றிய போது என்னுடன் பணியாற்றியவர்கள் பல பேர் தற்போது பெரிய ஆளாக மாறிவிட்டார்கள். அவர்களிடம் நான் எந்த ஊரு தொடர்பிலும் இல்லை. அதே போல ஒரு சிலர் என்னிடம் தற்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. மேலும், நான் நீண்ட காலமாகவே ரீச்செட் நிகழ்ச்சியில் டிஜிட்டல் முறையில் மீண்டும் கொண்டு வரலாம் என்று நினைத்து இருக்கிறேன் ஆனால் அதனை மக்கள் வரவேற்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement