மீரா மிதுன் காதலர் கலர் கோழியையும் கையோடு அழைத்து வந்துள்ள காவல் துறையினர். கண் கொள்ளா காட்சியின் வீடியோ.

0
2349
meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் சவடால் விட்டுக்கொண்டு அடாவடி செய்து வந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்த இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி பலரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தர குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் பலரும் இவர் மீது புகார் அளித்து இருந்தனர்.

இதையும் பாருங்க : 24 மணி நேரமா எனக்கு சோறே போடல, என் கைய உடைசியிட்டங்க – சென்னை ஸ்டேஷனில் புலம்பிக் கொண்டே போன மீரா மிதுன்.

- Advertisement -

ஆனால், போலீஸ் தன்னை கைது செய்ய முடியாது என்று சவால்விட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று இவரை கேரளா உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசார் கைது செய்து உள்ளனர். தன்னை கைது செய்த போது போலீசிடேமா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இப்படி ஒரு நிலையில் இவர் இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு,  சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜர் படத்தப்பட்டுள்ளார்.இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனின் காதலரான கலர் கோழி குஞ்சி எனப்படும் அபிஷேக் சேமியையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அதே காரில் தான் அவரது காதலர் கலர் கோழியும் இருந்துள்ளார். மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காக இவரது பாய் ஃபிரென்ட் அபிஷேக் ஷாம்மை கைது செய்துள்ளனர். மீரா மிதுன் எது செய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் வெளியிடும் வீடியோக்களை படம் பிடித்து கொடுத்த குற்றத்திற்காக தான் தற்போது அபிஷேக் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement