தானா சேர்ந்த கூட்டம் நடிகை மீரா மிதுனின் அழகி பட்டம் பறிப்பு.! காரணம் இது தான்.!

0
1849
meera-mithun
- Advertisement -

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் நடிகையும் மாடல் அழகியுமான மீரா மீதும். அந்த படத்தில் கலையரசுனுக்கு மனைவியாக நடித்திருந்தார். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார். 

-விளம்பரம்-
meera

பெங்களூருவை சேர்ந்த தமிழ்செல்வி என்ற மீரா மிதுன், மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், சென்னை வடபழனியில் தமிழக பெண்கள் பங்குபெறும் மிஸ் தமிழ்நாடு திவா என்ற அழகி போட்டி ஒன்றை நடத்த உள்ளதாக இருந்தார்.

- Advertisement -

ஆனால், அதனை தடுக்கும் விதமாக, போலீசார் உள்பட பலர் தனக்கு மிரட்டல் விடுத்துவருவதாகவும்,  தனது அந்தரங்க புகைபடங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது ஒருபுறம் இருக்க, மீரா மிதுனின் அழகி பட்டத்தை திரும்ப பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா நிறுவனம் , திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மீரா மிதுன் அழகி பட்டத்தை வைத்து முறைகேடில் ஈடுபட்டதால் அதனை திரும்ப பெற்றுள்ளதாகவும், இதன்பிறகு தென்இந்திய அழகி பட்டத்தை அவர் பயன்படுத்த முடியாது எனவும் அந்நிறுவனம் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement