கடைசி காலத்தில் தேனி குஞ்சரம்மாளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – விஷயம் அறிந்ததும் கேப்டன் செய்த உதவி.

0
389
theni
- Advertisement -

விஜயகாந்த் இல்லை என்றால் நாங்கள் இல்லை என்று நடிகர் ஒருவர் உணர்ச்சி பொங்க பேசியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்பவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த். அதோடு வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த ஒரே நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இவர் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார். கொரோனவின் போது கூட பல ஏழை மக்களுக்கு உணவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைகொடுக்காத உடல்நிலை :

மேலும், சினிமா திரையில் அனைவருக்கும் நல்ல உணவு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்முறை படுத்தியவர் விஜயகாந்த் தான். அதனால் தான் இவரை புரட்சி கலைஞர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பாரி வள்ளலை போல் வாரி வழங்கியவர் விஜயகாந்த். இதனாலே இவரை கொடை உள்ளம் படைத்தவர் என்றே பலரும் அழைத்து இருந்தார்கள். இப்படி நல்ல உள்ளம் படைத்த மனிதர் கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வருவது பலருக்குமே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

மீசை ராஜேந்திரன் பேட்டி :

மேலும், நடிகர் விஜயகாந்தை தன் குடும்பத்தில் ஒருவராக பல பேர் நினைக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் மீசை ராஜேந்திரன். இந்நிலையில் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் விஜய்காந்துடைய கொடை உள்ளம் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர், பல நடிகர்களின் கண்ணீரை துடைத்து துயர் போக்கியவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் பாடகியும், நடிகையுமான குஞ்சரம்மாள் இறந்தபோது அவருடைய இறுதி சடங்கு கூட காசு இல்லாமல் அவர்கள் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது குஞ்சரம்மாளின் குடும்பத்தினர் விஜயகாந்தை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது அவர் என்னை அழைத்து இது போல் நடிகை குஞ்சரம்மாள் இறந்து விட்டார். இந்த பத்தாயிரம் பணத்தை யாருக்கும் தெரியாமல் குஞ்சரம்மாள் மகளிடம் நான் கொடுத்ததாக கூறி அவர்களிடம் தந்து விட்டு வா என்று என்னை அனுப்பினார். இப்படி பல பேருக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை விஜயகாந்த் செய்திருக்கிறார். நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை ஏன் வைக்க வேண்டும் என்று சொன்னேன் என்றால் அந்த கட்டிடம் இருக்கும் இடத்தை மீட்டதே விஜயகாந்த் தான். அதற்காக தான் அவருடைய பெயரை வைக்க சொன்னேன் என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார்.

Advertisement