மன்னித்துவிடுங்கள் விஜய், குடுத்த வாக்கை காப்பற்றிவிட்டேன் – மீசை ராஜேந்திரன் பதிவிட்ட புகைப்படம்.

0
497
Leo
- Advertisement -

லியோ படத்தை எதிர்த்து சவால் விட்ட மீசை ராஜேந்திரனின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் லியோ படம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியா முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் முதல் நாளே 100 கோடிக்கு மேல் லியோ வசூலித்துள்ளது. அதோடு முதல் நாளே ஜெயிலர் படத்தின் வசூலை லியோ மிஞ்சி விட்டது. இனி வரும் நாட்களில் லியோ படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மீசை ராஜேந்திரன் சவால்:

மேலும், நவம்பர் 4 ஆம் தேதி லியோ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் தனது மீசையை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். அதாவது, கடந்த சில ஆண்டுகளாக விஜய் மற்றும் ரஜினிக்கு இடையை சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி சென்று கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீசை ராஜேந்திரன் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டதற்கு விஜய் ஆசைப்படலாமா.

லியோ சாதனை:

லியோ படம் மட்டும் ஜெயிலர் அளவிற்கு வசூல் செய்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். லியோ 300 கோடிக்கு மேல் தாண்டாது. ஒரு லட்சம் பந்தயம் வச்சிக்கலாம் என்று கூறி இருந்தார். மேலும் லியோ படம் எதிர்பார்த்ததை விட ஜெயிலரை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பங்கமாக மீசை ராஜேந்திரனை கலாய்த்து வருகின்றனர். அதோடு பேட்டியில் கூட தொகுப்பாளர் saving blade வைத்து கொண்டு மீசை ராஜேந்திரனை கிண்டல் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் கொந்தளிப்பு:

இந்த நிலையில் மீசை ராஜேந்திரன் தன்னுடைய மீசை எடுத்து இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து நான் கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன் என்று கூறி இருக்கிறார். ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும், இது போட்டோ எடிட் செய்யப்பட்டது. இது ஏமாற்று வேலை. ஜ மீசை ராஜேந்திரனுக்கு நன்றாகவே ஏமாற்றத் தெரியும். உண்மையான ஆம்பளையாக இருந்தால் மீசை எடுக்க சொல்லுங்கள் என்று விஜய் ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.

Advertisement