எனக்கு அந்த மொழி பேசாத் தெரியாது அதுனால என்ன வேனா சொல்லிட்டாங்க – முன்னணி இயக்குனரின் வாய்ப்பை இழந்த ஆத்மீகா.

0
1097
aathmika
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை லக் இருந்தால் அறிமுக நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே மாபெரும் பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஆத்மிகா. பிரபல பாப் பாடகர், இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆத்மீகா. இந்த படம் இளைனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

-விளம்பரம்-

தற்போது இவர் நரகாசுரன், கண்ணை நம்பாதே, காட்டேரி, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம், யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு படம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆத்மிகாவுக்கு இந்தி பேச தெரியாததால் பாலிவுட் பட வாய்ப்பை இழந்ததாக சமீபத்தில் நடந்த பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறி இருப்பது, பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ஆனந்த் எல் ராயின். இவர் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு தமிழ், இந்தி என இரு மொழிகளும் பேச தெரிந்த நடிகை தான் தேவை என்று சொன்னார்கள். ஆனால், எனக்கு ஹிந்தி பேச தெரியாது. அதனால் அப்பட வாய்ப்பு கைநழுவியது.

Aathmika Grey Bali matching with look from Enna Nadanthalum ...

அந்தத் தருணத்தில் நான் அதிகம் வருத்தப்பட்டேன். நான் பாலிவுட் படங்களின் மிக பெரிய ரசிகை. ஆனால், அந்த மொழியைக் கற்க முடியவில்லை. அதனால் இப்போது ஊரடங்கில் நான் இந்தி கற்று வருகிறேன் என கூறியுள்ளார். ஆனந்த் எல் ராய் அவர்கள் இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement