சினிமாவை பொறுத்து வரை எத்தனையோ நடிகர்களை நாம் உண்மையில் சகோதர சகோதரிகள், அண்ணன் தம்பிகள் என்று நினைத்தது உண்டு. அஜித் – பிரசாந்த் அண்ணன் தம்பி, திரிஷா – ரீமா சென் அக்கா தங்கை, Vj மணிமேகலை – Vj அஞ்சனா அக்கா தங்கை என்று நாம் பலர் நினைத்து இருக்கலாம். அந்த வகையில் சமீப காலமாக நடிகை மீஷா கோஷலும், Vj பூஜாவும் அக்கா தங்கை என்று பலர் நினைத்து இருக்கின்றனர். அதெல்லாம் சரி யார் இந்த மீஷா கோஷல் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
யார் இந்த மீஷா :
சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில படங்களில் நடிகைகளை விட நடிகைகளுக்கு தோழியாக வரும் நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனின் முதல் காதலியாக வரும் நடிகை, தலைவா படத்தில் விஜய் காதலிக்கும் பெண்ணாக வரும் நடிகை என்று இப்படி இந்த துணை நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டேதான் செல்கிறது. அந்த வகையில் நடிகை மிஷா கோஷல் ஒருவர்.
பல படங்களில் துணை நடிகை :
தமிழில் நீங்கள் இவரை பல படங்களில் கதாநாயகிகளின் தோழியாக பார்த்திருக்கலாம். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானது சேரன் இயக்கத்தில் வெளியான பொக்கிஷம் திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த படத்தில் பத்மபிரியாவின் தங்கையாக நடித்து இருப்பார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் நான் மகான் அல்ல, ஏழாம் அறிவு, முகமூடி போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அந்தகாரம் படத்தில் மெயின் ரோல் :
அதிலும் குறிப்பாக அட்லி இயக்கிய ராஜாராணி படத்திலும், மெர்சல் படத்தில் இவர் நடித்திருக்கிறார். ராஜாராணி படத்தில் நயன்தாராவின் எதிர்வீட்டு பெண்ணாகவும் மெர்சல் படத்தில் சமந்தாவின் தோழியாகவும் நடித்திருக்கிறார் மிஷா கோஷல். இறுதியாக கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் அந்தகாரம் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து இருந்தார் மிஷா கோஷல்.
Vj பூஜாவின் தங்கையா :
இந்த திரைபடம் மிகவும் தரமான ஒரு த்ரில்லர் படமாக அமைந்து இருந்தது. மேலும், இது ஒரு ஒருபுறம் இருக்க சமீப காலமாக இவரையும் பிரபல Vjவும் நடிகையுமான பூஜாவையும் அக்கா தங்கைகள் என்று பலர் நினைத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து இவரிடம் கேட்கப்பட்டது. அப்போது இதுகுறித்து சொன்ன மீஷா கோஷல் ‘நானும் பூஜாவும் அக்கா தங்கை இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது
மீஷா கோஷல் சொன்ன உண்மை :
ஆனால், எனக்கும் அவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது அது எங்களுடைய தலைமுடி ஆகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் அவரையும் நிறைய பேர் வந்தனர். அதிலும் குறிப்பாக அந்தகாரம் படத்திற்கு பின்னர் நிறைய மீம்ஸ் எல்லாம் வந்தது இந்த படம் வெளியான பின்னர் அவரிடம் பேசினேன். அவருக்கும் அதே பிரச்சினை தான். ஆனால். அவர் ஆமாம் நாங்கள் அக்கா தங்கை தான் என்று சொன்ன ஆரம்பித்து விட்டாராம் என்று கூறியுள்ளார் மீஷா கோஷல்.