5 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலரை 2 முறை திருமணம் செய்துள்ளார் பிரபல தென்னிந்திய நடிகையான மேக்னா ராஜ்.கன்னட நடிகையான இவர் தமிழில் “”காதல் சொல்ல வந்தேன்” மற்றும் பிக் பாஸ் பிரபலர் சினேகன் நடித்த “உயர் திரு 420” போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னடா, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பெங்களூரை சேர்ந்த தனது 10 ஆண்டு நண்பரான சிரஞ்சீவி சார்ஜா என்ற நபரை 5 ஆண்டுகளாக காதிலிது வந்தார். மேலும் சிரஞ்சீவி சார்ஜா பிரபல நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அன்னான் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்களது திருமணம் சென்ற வாரம் புதன் கிழமை அன்று ஹிந்து முறைப்படி நடந்தது. பின்னர் கடந்த ஞாற்றுக்கிழமை ஒரு கிறித்துவ ஆலயத்தில் கிறித்துவ முறைபடி திருமணம் நடந்தது. மேலும் இந்த திருமணத்தில் மணமகனின் சித்தப்பாவான நடிகர் அர்ஜுன் திருமணம் முழுவதும் அங்கேயே இருந்தார்.
மேலும் இந்த திருமணத்திற்கு அர்ஜுனின் குடும்ப நபர்களும் நெருங்கிய சொந்தங்களும் பங்குபெற்றனர். மேலும் பல்வேறு கன்னட பிரபலங்களும் பங்கு பெற்ற இந்த திருமணத்தில் நடிகை நஸ்ரியாவும் வந்திருந்தார்.