தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை மேக்னா ராஜ். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை நடிகை மேக்னா ராஜ் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.அதுமட்டும் இல்லாமல் அப்போது மேக்னா தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார். தன் முதல் குழந்தையை பார்ப்பதற்குள் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. கணவர் இறந்த சில மாதத்தில் மேக்னாவிற்கு வளைகாப்பு நடைபெற்றது. அதில் சிரஞ்சீவின் புகைப்படம் முன் அவரது வளைகாப்பு நடைபெற்றது. மேலும், சர்ஜா பிரிவில் சோகத்தில் இருந்த மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் இவர் வாழ்க்கையில் சந்தோசம் எட்டி பார்த்தது. மேலும், ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டப்பட்டது.
ஷோசியல் மீடியாக்களில் பரவிய வதந்தி :-
அதோடு மேக்னா ராஜ் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகை மேக்னா ராஜ் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் அவர்கள் கன்னட பிக் பாஸ் டைட்டில் வின்னரர் பிராதமை இரண்டாவது முறையாக திருமணம் செய்யப் போகிறார் என்ற வதந்தி சோஷியல் மீடியாவில் வந்துள்ளது. இது அப்போது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரதாம் ட்விட்டர் பதிவு:-
இதற்கு பிரதாம் அவர்கள் தனது ட்விட்டரில் கருத்து ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் இதை புறக்கணிக்க நினைத்தேன். ஆனால், இந்த செய்தி 2.70 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து உள்ளது. யூடியூப் சேனல்கள் பணத்திற்காக இப்படி தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவதால் இதற்கு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க நான் நினைக்கிறேன். இதுபோன்ற வீடியோக்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் போது தான் மற்ற சேனல்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று அவர் பதிலளித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் போட்ட ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருந்தது.
இரண்டாம் ஆண்டு நினைவு நாள் :-
இப்படி ஒரு நிலையில் சிரஞ்சீவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமீபத்தில் கடந்த ஜுலை மாதம் வந்து இருந்தது. இதையொட்டி சிரஞ்சீவி மற்றும் மேக்னா குடும்பத்தினர் அவரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது தன் குழந்தைக்கு இவர் தான் அப்பா என்று அவரது புகைப்படத்தை காட்டி கண் கலங்கினார் மேக்னா. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் கண்ணீர் வடித்து மேக்னாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.இந்நிலையில் மேக்னா ராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொன்டர் அப்பொழுது மேக்னா ராஜ் பேட்ட எடுத்தவர்களில் ஒருவர் இரணடாவது திருமணம் குறித்த கேள்வி எழுப்பினார். அதற்கு மேக்னா ராஜ் அளித்த பதில்.
இரண்டாவது திருமணம் குறித்து மேகனா ராஜ் பதில் :-
என் கணவர் என்னிடம் எப்போதும் ஒன்று சொல்வார் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் இறுதி முடிவு எடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று. அதனால் ஒரு சிலர் என்னை இரண்டாவது திருமணம் செய்யும்படி கூறுகிறார்கள் மற்றும் சிலர் சிரஞ்சீவி நினைவிலே வாழும் படி கூறுகிறார்கள். இரண்டாவது திருமணம் குறித்து இதுவரை எந்த முடிவும் நான் எடுக்கவில்லை என் குழந்தையை பற்றி மட்டும் தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் என் மனநிலை எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை ஆனால் என் வாழ்க்கையில் நான் எந்த முடிவெடுத்தாலும் சிரஞ்சீவி என் என்னுடனே இருப்பார். என் குழந்தையின் எதிர்காலமே பற்றி சிந்திபதில் மட்டுமே இப்பொழுது கவனமாக இருக்கிறேன். என மேகனா ராஜ் பதில் கொடுத்திருந்தார்.