மாநாடு படத்தின் ட்ரைலர் – விஜய் மற்றும் எஸ் ஏ சியை வச்சி செய்யும் நெட்டிசன்கள். (அநியாயம்டா இதெல்லாம்)

0
3246
vijay
- Advertisement -

சமீபத்தில் வெளியான சிம்புவின் மாநாடு படத்தின் ட்ரைலரில் வரும் காட்சியை வைத்து விஜய் மற்றும் அவரது தந்தை எஸ் ஏ சியை கேலி செய்து பல விதமான மீம்கள் வைரலாகி வருகிறது. தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சலசலப்பு சர்ச்சைகள் எல்லாம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக எஸ் ஏ சி அறிவித்து இருந்தார். அன்றில் இருந்து ஆரம்பமானது தந்தை மகன் பிரச்சனை. அப்போது தனது பெயரை அரசியல் ரீதியாக பயன்படுத்துக்கூடாது என்று விஜய் அறிக்கை வெளியிட்டார்.

-விளம்பரம்-

மேலும், இந்த பிரச்சனை துவங்கியதில் இருந்து விஜய் மற்றும் எஸ் ஏ சி பேசுவது கூட இல்லை. தன்னிடம் தனது மகன் பேசவில்லை என்றாலும் அவர் என் மகன் தானே அவரது நல்லதுக்கு தான் அனைத்தும் நான் செய்கிறேன் என்று பேசிய எஸ் ஏ சி ‘அப்பாவிடம் பேசுப்பா’ என்று கலங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடையே இருக்கும் பிரச்சினை முற்றிவிட்டது.

- Advertisement -

நடிகர் விஜய் அவர்கள் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும் மற்ற பணிகளை மேற்கொள்ள கூடாது என்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்.இந்த நிலையில் தான் நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக எஸ் எ சி அறிவித்து இருந்தார்.

இதனிடையே விஜய்யை பார்ப்பதற்கு எஸ்ஏ சந்திரசேகரும், அவர் மனைவியும் சென்றுள்ளதாகவும் அவர்களை பார்க்க முடியாது என்று விஜய் மறுத்துவிட்டதாகவும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது.ஆனால், அது முற்றிலும் பொய்யான தகவல் என்று எஸ் எ சி வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களாகவே எஸ் எ சி, விஜய் பற்றி பேசும் போது அது எதாவது சர்ச்சையில் முடிந்துவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் எஸ் எ சி செய்தி சேனல் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது துப்பாக்கி படத்திற்கு பின்னர் அப்படி ஒரு திரைக்கதை வரவே இல்லை என்று கூறி இருந்தார். இப்படி எஸ் ஏ சியின் பேச்சால் விஜய்யை சமூக வலைதளத்தில் வச்சி செய்து வந்தனர்.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் மாநாடு படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இந்த படத்தில் எஸ் ஏ சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலரில் எஸ் ஏ சியை சிம்பு சுட்டுக்கொள்வது போல ஒரு காட்சி இடம்பெற்று இருக்கிறது. அந்த காட்சியை பார்த்து விஜய் சந்தோசப்படுவது போல பல விதமான மீம்களை போட்டு வச்சி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement