கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா..! எந்த படம் தெரியுமா…?

0
1052
Mercury movie

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இவர் ஏற்கனவே சூது கவ்வும், ஜிகிர்தண்டா போன்ற ஹிட் படங்களை எடுத்துள்ளார்.கலைஞர் டீவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறந்த குறும் படங்களை இயக்கி அதன் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

Mercury

பெரும்பாலும் கார்த்திக் சுப்புராஜின் படங்களில் பிரமாண்ட செட்களோ, கோடி கணக்கில் செலவளித்தோ எடுபதில்லை அதற்கு மாறாக அவரின் கதைக்களம் மற்றும் அதில் நடிக்கும் நடிகர்களின் பங்குகள் மிகவும் வித்யாசமாக அமைந்திருக்கும்.

இவரின் அடுத்த படைப்பான மேற்குரி என்ற படத்தில் நடன புயல் பிரபுதேவா நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வசனமே இல்லாத ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ் . சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகவும் வைரலானது.

ஆனால் டீசரை பார்க்கும் பொது ஹாலிவுட் சினிமா பார்க்கும் தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக யூகிதிருப்பார்கள் இது ஏதோ ஒரு ஹாலிவுட் படம் போன்றே உள்ளது என்று.இந்நிலையில் இந்த படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் தமிழ் நாட்டில் சினிமா ஸ்டரைக் நடந்து வருவதால் இங்கு மட்டும் இந்த படம் வெளியாகவில்லை.

Dont Breath

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் 2016 இல் ஹாலிவுட்டில் வெளியான “DON’T BREATHE” என்ற சைக்கோ கிள்ளர் படம் போன்றே உள்ளது என்று கூறிவருகின்றனர். இருப்பினும் இந்த படத்திற்கு பாஸிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் பிரிவிவ் ஷோவை பார்த்த அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்குனர் சந்தீப் வங்கா கார்த்திக் சுப்புராஜை பாராட்டியுள்ளார்.