மெர்சல் படத்தில் நீக்கப்பட்ட ஸ்நேக் மேஜிக் உள்ளிட்ட காட்சிகள் எப்போது ரிலீசாகும்..!

0
2547
Meral

நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், பல்வேறு தடைகளைத் தாண்டி அறிவித்தபடி நேற்று உலகம் முழுதும் வெளியானது.
Mersalதலைப்பு முதல் தகுதிச் சான்றிதழ் வரை பல்வேறு சிக்கல்களை மெர்சல் படம் சந்தித்தது. தலைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையில், படத்துக்கு தணிக்கைக் குழு சான்றிதழ் அளிப்பதில் இழுபறி ஏற்பட்டது. விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்கிய நிலையில்,  படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழை தீபாவளிக்கு முதல் நாள் தான் வழங்கியதை தொடர்ந்து படம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் பீஸ் ப்ரோ என்ற வசனத்தில் கூட புறாவுக்கு பதிலாக ஒரு மேஜிக் பந்து சுழல்வது போல காட்சி மாற்றியமைக்கப்பட்டது. மேலும், ராஜ நாகம், வெள்ளை நாகம், ஸ்நேக் மேஜிக் போன்ற சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
mersal
இதையும் படிங்க: மெர்சல் படத்தில் இந்த காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவேன் – தமிழிசை பரபரப்பு !

நீக்கப்பட்ட காட்சிகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.தற்போது படக்குழு நீக்ப்பட காட்சிகள் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது