மெர்சலாக்க காத்திருக்கும் மெர்சல் ரசிகர்கள்.!

0
663
Actor Vijay

இளைய தளபதி விஜய் மற்றும் இயக்குஞர் அட்லீ கூட்டணியில் உருவான “மெர்சல்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான கடந்த ஜீன் 22 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளிடப்பட்டது.
Mersalபடம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்கிற நிலையில் கடந்தமாதம் 20ம் தேதி ஆடியோ லாஞ்ச் செய்யப்பட்டது.இந்நிலையில் மெர்சல் படத்தின் டீசர் இம்மாதம் 21ம் தேதி அட்லியின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெர்சல் படத்தின் கதையை உறுதி செய்கிறது இந்த போஸ்டர் !

இதுவரை வெளியான டீசர்களிலேயேகடந்த மாதம் சிவா–அஜீத் கூட்டணியில் வெளியான விவேகம் படத்தின் டீசர் தான் யூ–டியூப் இணையதளத்தில் உலகிலேயே அதிகம் லைக் செய்யபட்ட டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது. 5 லட்சத்து 48,000+ லைக்ஸ்களை இதுவரை போற்றுள்ளது விவேகம்.

Vijay

தற்போது விவேகம் படத்தின் டீசர் செய்த சாதனையை முறியடிக்க விஜய்யின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆடியோ வெளியீடு நடந்ததில் இருந்து ரசிகர்கள் டீஸருக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதற்காக விஜய் ரசிகர்கள் பல மீம்ஸ்களை சமூகவலைத்தங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
Vijayகுறிப்பாக விவேகம் டீசர் படைத்துள்ள உலக சாதனையை முறியடிக்க, உலகம் முழுதிலும் எந்தெந்த நாட்டில் எத்தனை மணிக்கு டீஸர் வெளியாகிறது என்ற விவரத்தை விஜய் ரசிகர்கள் ஒரு புகைப்படம் மூலமாக தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களின் மத்தியில் தற்போது வைரலாகி வருகின்றது.