விஜய்யின் மாஸ் இன்ட்ரோ சீனுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டாங்களா…? – மெர்சல் விஷ்ணு

0
1866

பொதுவா மாஸ் ஹீரோக்களுக்கு ஒரு இன்ட்ரோ சீனையே மாஸா காட்டணும்னு ஒளிப்பதிவாளர்கள் அதிகம் மெனக்கெடுவாங்க. இந்தப் படத்தில் மூன்று இன்ட்ரோ சீன் இருக்கு. அதற்காக எவ்வளவு மெனக்கெட்டீங்க..?

முதல் இன்ட்ரோ சீன் பார்த்தீங்கன்னா, ஒரு சின்ன ரூம்குள்ள விஜய் அண்ணா புஷ்-அப் எடுக்குற மாதிரி இருக்கும். பெரிய இடத்தில் ஷூட் பண்ணும்போது நிறைய யோசிக்கலாம். ஆனா, அந்த சீனில் நாங்க ஒரு சின்ன ரூம்ல மாட்டிக்கிட்டோம். இருந்தாலும், அதில் எப்படி வித்தியாசமான ஃப்ரேம்ஸ் வைக்கலாம்னு அதிகம் யோசிச்சோம். அந்த சீன் எடுக்கும்போதே, `இந்த சீன்தான் படத்தோட முதல் சீன். செம மாஸா இருக்கணும்’னு அட்லி சொல்லிட்டார். அதுனால, விஜய் அண்ணா கையை மடக்குறது, ஒரு கையில புஷ்-அப் எடுக்குறது, புஷ்-அப் எடுக்கும்போது க்ளாப் பண்றதுனு நிறைய ஷாட்ஸ் யோசிச்சு, யோசிச்சு பண்ணினோம். அந்த சீன்ல விஜய் அண்ணாவோட முகத்தை காட்டவே கூடாதுனு அட்லி சொன்னார். அதுக்கு ஏற்ற மாதிரியும் ஃப்ரேம் வைக்கிறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு.
mersal இதே மாதிரிதான் ப்ளாஷ் பேக் ஹீரோவோட இன்ட்ரோ சீனும். காலில் ஆரம்பிச்சு, அவர் நடக்கும்போது பின்னாடி இருந்து ஷூட் பண்ணினோம். அப்புறம் கையில மண்ணை எடுத்து, அதைத் தட்டிவிடும்போது ஹீரோவோட முகம் தெரியும். இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி அந்த இன்ட்ரோ சீன்களை எடுத்தோம். இப்போ தியேட்டரில் அதுக்கான ரெஸ்பான்ஸைப் பார்க்கும்போது மெய்யாலுமே மெர்சலாயிருக்கு.

படத்தோட எந்த சீனை மேக் பண்றது சிரமமா இருந்துச்சு..?

ஃப்ளாஷ்பேக்ல வர திருவிழா சீன்தான் ஷூட் பண்றதுக்கு சிரமமா இருந்துச்சு. தண்ணீரையும் தீயையும் சீஜில கொண்டுவரது கஷ்டம். அப்படிக் கொண்டு வந்தாலும் யதார்த்தமா இருக்காது. மெர்சல் படத்தோட திருவிழா சீன்ல நீர், நெருப்பு என ரெண்டும் அதில் இருக்கும். அதுனாலேயே அந்த சீன் மேக் பண்றது கஷ்டமா இருந்துச்சு. அந்த சீன் எடுக்கும்போது யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் பேய் மாதிரி வேலை பார்த்தோம். கிட்டத்தட்ட 2,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அந்த சீன்ல இருப்பாங்க. அவங்க எல்லாரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துட்டு இருக்கணும். சும்மா நின்னுட்டு இருந்தா அது தனியா தெரியும். கூட்டத்தை கன்ட்ரோல் பண்றதும், தண்ணி, நெருப்புக்குள்ள போய் ஷூட் பண்றதும் கஷ்டமா இருந்துச்சு. இப்போ அந்த சீனோட அவுட்புட் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.
mersal படத்தோட விஷூவல் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்… அவருக்கு எந்த சீன் ரொம்பப் பிடிச்சதா சொன்னார்..?

அவர் படம் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். சின்னச் சின்ன விஷயத்தையும் நோட் பண்ணி இது நல்லா இருந்துச்சு, அது நல்லா இருந்துச்சுனு எதையும் மறக்காம சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்லேயே விஷூவல் பார்த்துட்டு பாராட்டினார். அவருக்கு ஆளப்போறான் தமிழன் சாங்கோட விஷூவல்தான் ரொம்ப பிடிச்சிருந்ததுனு சொன்னார்