6 கண்டங்கள்… 72 நாடுகள்… 29 மாநிலங்கள்… கூகுள் தேடலில் மெர்சல் ரெக்கார்டு!

0
3035
mersal
- Advertisement -

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் வசூலில் கல்லாக்கட்டும் என்பது பல ஆண்டுகளாக நடப்பதுதான். இன்றைய ட்ரெண்டெல்லாம் எவ்வளவு மணி நேரத்தில் ட்ரெய்லர் மில்லியன் வியூஸ் தாண்டும்.. கூகுள் ட்ரெண்டில் முதல் நாள் முதல் காட்சி இடம்பெறுமா என்பது தான். ட்ரெண்டிங்கில் டாப் அடித்ததும் ”பீஸ் ப்ரோ” சொல்லும் ரசிகர்களின் மெர்சல் ட்ரெண்ட் என்ன தெரியுமா?
mersal

-விளம்பரம்-

மெர்சல் திரைப்படத்தின் கூகுள் ட்ரெண்டில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ…
mersal

- Advertisement -

உலகிலுள்ள 72 நாடுகளில் ரீலீஸ் ஆன அன்று ”மெர்சல்” என்ற வார்த்தையைத் தேடியுள்ளனர்.
mersal
மெர்சல் ட்ரெண்ட் 6 கண்டங்களிலும் ஏதோ ஒரு மூலையில் தேடப்பட்டுள்ளது.
உலகின் மெர்சல் குறித்த தேடலில் டாப் 5 தேடல்களில் ஆச்சர்யமான தேடல் ”தமிழ்”
mersal

மெர்சல் தொடர்பாக தேடப்பட்ட தலைப்புகளில் ”தமிழ் மொழி” குறித்த தேடல் இடம்பெற்றுள்ளது.
mersal
இந்தியாவின் கூகுள் தேடலில் மெர்சல் என்ற வார்த்தையை அனைத்து மாநிலங்களும் தேடியுள்ளன. இதற்கு முன் கடந்த ஒரு வருடத்தில் இந்திய மாநிலங்கள் அனைத்தும் தேடிய வார்த்தை என்பது ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, ஜெயலலிதா, கபாலி, பாகுபலி.

-விளம்பரம்-

இந்தியத் தேடலின் டாப் 5-ல் மெர்சல் விமர்சனம், மெர்சல் டவுன்லோடை தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் குறித்த தேடல் இடம்பெற்றுள்ளது.

மெர்சல் படம் குறித்து அதிகம் தேடிய மாநிலம் தமிழ்நாடு,

தமிழ்நாட்டில் அதிகம் தேடிய டாப் 3 நகரங்கள் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி.
mersal

Advertisement