மெர்சல் சீனாவில் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறதா..? விஜய் படைத்த பிரம்மாண்ட சாதனை.!

0
99
Mersal

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு மற்றுமொரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

Mersal

விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படத்தை சீனா நாட்டில் வெளியிட திட்டம்மிட்டுள்ளனர். இந்த படத்திற்கான சைனா வெளியிட்டு உரிமத்தை எச்.ஜி.சி என்டர்டைன்மன்ட் என்ற சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தை ‘மாண்டரின்’ மொழியில் மொழிமாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சீனாவில் மொத்தம் உள்ள 40 ஆயிரம் திரையரங்குகளுள் 10 திரையரங்கில் “மெர்சல் ” படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை சீனாவில் வெளியான எந்த ஒரு தமிழ் படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை என்று கூறப்படுகிறது.

mersal

மேலும், “மெர்சல்” திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. அதே போல சைனாவில் முதன் முதலில் ரஜினியின் ‘முத்து’ படம் தான் வெளியாகியிருந்தது. இறுதியாக சைனாவில் , இந்திய திரைப்பட வரிசையில் ‘டங்கள், பாகுபலி’ போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படங்களுக்கு பின்னர் “மெர்சல் ” படம் தான் சீனாவில் வெளியாகும் தமிழ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.