மெர்சல் சம்பள பாக்கி..!தேனாண்டாள் நிறுவனத்திற்கு போன் செய்து வெளுத்து வாங்கிய மேஜிக் கலைஞர்..!வீடியோ இதோ..!

0
626
Mersalmagicartist

நடிகர் விஜய் மூன்று வேடத்தில் அசத்திய ‘மெர்சல்’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மேஜிக் கலைஞசராக நடித்திருந்த விஜய் அதற்காக 6 மாதத்திற்கும் மேலாக பிரபல மேஜிக் நிபுணர் ராமன் என்பவரிடம் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இதனை படக்குழு தான் நடிகர் விஜய்க்கு ஏற்பாடு செய்துள்ளது.


- Advertisement -


இந்த படத்தில் மேஜிக் நிபுணரான ராமன்,  மெர்சல் படத்தில் நான் 6 மாத காலம் பணியாற்றினேன். ஆனால்,எனக்கு அந்த படத்தில் பணியாற்றியதற்காக முழுமையாக சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்நிலையில் மேஜிக் நிபுனர் ராமன் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவன மேலாளரிடம் போன் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நவம்பர் மாதத்தில் நீங்கள் கண்டிப்பாக எனக்கு பணத்தை தந்துவிடுவதாக கூறினீர்கள். இன்று டிசம்பர் 6.
எனது சம்பள பாக்கிக்காக நான் நீண்ட நாட்கள் காத்திருப்பது உங்களுக்கு தெரியும். என்னைப்போல் இன்னும் பலருக்கு சம்பள பாக்கி இருப்பது உங்களுக்கு தெரியுமா? இன்னும் இரண்டு நாட்கள் காத்திருப்பேன். சம்பளம் வரவில்லையென்றால் நான் வீடியோ பதிவு போட்டுவிடுவேன் என்று பேசியுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement