மெர்சலா இருந்தாலும் அது தான் சட்டம் – தமிழ் ராக்க்கர்ஸ் அதுப்பு!

0
8459
mersal tamil rockers

பல படங்களை இணையதளத்தில் சட்ட விரோதமாக வெளியிட்டு கோடிக்கணக்கில் காசு பார்க்கும் இணையதலமான ‘தமிழ் ராக்க்கர்ஸ்’ மெர்சல் படத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ் ராக்க்கர்ஸ் இணையதளத்தில் மெர்சல் படம் முதல் நாளில் வெளியாகாது என செய்திகள் பரவியது. தற்போது அந்த செய்தி உண்மையல்ல, மெர்சல் படமாக இருந்தாலும் அனைத்து வழக்கமான படங்களை போலவே மெர்சல் படமும் முதல நாளிலேயே HD தரத்துடன் வெளியிடப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்தத்துள்ளது தமிழ் ராக்க்கர்ஸ் இணையதளம்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு இணையதளத்தில் தமிளராக்கர்ஸ் இணையதளம் எப்படி துவங்கியது , அதன் வரலாறு என்ன என்பதை ஒரு ஆங்கிலத்தில் ஒரு ஆர்டிகில் ஒன்றை வெளியிட்டது. அதன் படி தமிழ் ராக்க்கர்ஸ் இணையதளத்தின் சொந்தகாரர் பாஸ்கர் எனும் கோயமுத்தூரை சேர்ந்த ஒருவர், அவர் இந்த சட்ட விரோத செயலை தனது 17 வயதில் இருந்தே CD கேசட் விற்பனை மூலம் துவங்கியவர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவருடைய சகா டேனியல் என்பவர், இவர்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் அலுவலகம் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

mersalசட்ட விரோதமாக ஆனலைனில் படத்தை வெளியிடுவதன் மூலம் 200 கோடிக்கு மேல் சம்பாதித்து உள்ளனர் எனவும் குறிப்பிடப்பப்பட்டிருந்து. இவர்களை பார்த்து தான் தற்போது பிரபலமான தமிழ் கன் (tamilgun) என்ற இணையதளமும் உருவானது. இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளால் ஒரு படத்தை தயாரிக்க உழைக்கும் பலநூறு பேரின் உழைப்பு திருடப்படுகிறது என்பது ரஹான் உண்மை. தற்போது இந்த மெர்சல் படத்தையும் முதல் நாளிலேயே நல்ல தரத்துடன் வெளியிடப்படும் என அறிவித்துள்ளதால் அதிர்ந்து போயிலுள்ள படக்குழு இந்த சட்ட விரோத செயலைக் கட்டுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.