வெட்கத்தை விட்டு வாய்ப்பு கேட்டேன்.! மெட்டி ஒலி சாந்திக்கா இந்த நிலைமை.!

0
1349
Meti-oli-shanthi
- Advertisement -

சமீபத்தில் நடந்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் `கூகை திரைப்பட இயக்கம்’ நிகழ்ச்சியில், சினிமா நடன இயக்குநர் சாந்தி கலந்துகொண்டு பேசினார். அதில், சினிமா துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து தன் அனுபவங்கள் வாயிலாகப் பேசியிருந்தார்.

-விளம்பரம்-
சாந்தி

அதன் பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசுகையில், லக்ஷ்மி’ படத்துல வரும் குழந்தைபோலத்தான் நானும். சினிமா பாடல்களைப் பார்த்தே டான்ஸ் கத்துக்கிட்டேன். சினிமாவுல டான்ஸ் மாஸ்டராக ஆசைப்பட்டேன். என் சின்ன வயசுல டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் கிடையாது. சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய சவாலாக இருந்துச்சு.

- Advertisement -

தாரா மாஸ்டர், ரகுராம் மாஸ்டர், பிரகாஷ் மாஸ்டர் உட்பட ஒன்பது பேர்கிட்ட நான் கையொப்பம் வாங்கினேன். டான்ஸ் யூனியன்ல உறுப்பினரானேன். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அதனால வேலை வாய்ப்புக்கு நான் கஷ்டப்படலை. 13 வயசுல சினிமாவுல, குரூப் டான்ஸரா சேர்ந்தேன். 

குரூப் டாண்டசரா ஆன பின்னர் தொடர்ச்சியா 16 மணிநேரமெல்லாம் வேலை செய்திருக்கேன். குடும்பக் கஷ்டத்துக்கு அப்படியெல்லாம் வேலை செய்தாலும், அதுக்காக நான் கவலைப்படலை. என்னதான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும், ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில்தான் வருமானமும் கிடைக்கும்.

-விளம்பரம்-
`மெட்டி ஒலி' சாந்தி

`நான் அசிஸ்டென்ட் மாஸ்டரா இருந்தப்போ, `உங்க திறமைக்கு மாஸ்டர் ஆகிடுங்க’ன்னு பல ஹீரோக்களும் இயக்குநர்களும் சொன்னாங்க. ஆனா, அப்படிச் சொன்ன யாருமே நான் டான்ஸ் மாஸ்டர் ஆன பிறகும்கூட வாய்ப்பு கொடுக்கலை. அப்படிச் சொன்னவங்க வீட்டுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போய் வெட்கத்தைவிட்டு வாய்ப்புக் கேட்டிருக்கேன். அப்போதும் ஒருவரும் மாஸ்டராக எனக்கு வாய்ப்புக் கொடுக்கவே இல்லைங்கிறதுதான் பெரிய கொடுமையும் காமெடியும். இப்படி ரொம்பக் கஷ்டப்பட்டு, 12 வருஷம் கழிச்சுத்தான் என் சொந்தத் திறமையால் டான்ஸ் மாஸ்டர் ஆனேன்

Advertisement