இந்த வயதில் ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சிகள், தொடர்ந்து செய்வேன் – விஜய் சேதுபதி நடிகை Bold பேச்சு.

0
597
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சனா. இவர் சுமார் 200படங்களுக்கு மேல் துணை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். இவரின் முழுப்பெயர் சானூர் சனா பேகம். இவர் பல படங்களில் நடிகை, நடிகர்களுக்கு அம்மாவாகவும், சகோதரியாகவும், பாட்டியாகவும் நடித்து பிரபலமானவர். நடிகை சனா தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ரவி தேஜா கிருஷ்ணாவின் படத்தில் பிரம்மானந்தின் மனைவியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது இவர் பிரபலமான சில சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் முதன் முறையாக கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான “நின்னி பெல்லாடுதா” என்ற படத்தின் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து அக்கினேனி நாகார்ஜுனா போன்ற முன்னனி தெலுங்கு நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாகினார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்த நடிகை சனா தமிழில் சின்னத்திரையிலும் கடந்த 2018ஆம் ஆண்டு வந்த “பொன்மகள் வந்தால்” என்ற படத்தின் மூலம் தமிழ் சீரியல்களில் அறிமுகமாகினார்.

- Advertisement -

மேலும், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க பெ ரணசிங்கம் படத்தில் கலெக்டர் வேடத்திலும் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் அஹாஹா ஒடிடியில் ஒளிபரப்பாகிவரும் மெட்ரோ காதல் என்ற சீரியலில் மிகவும் துணிச்சலான ஒரு காட்சியில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் இவர் நடித்துள்ள அந்த துணிச்சலான காட்சிக்கு பலவிதமான விமர்சனங்கள் வந்த நிலையில் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

விமர்சங்களுக்கு பதிலடி :

அந்த பதிவில் “நான் மெட்ரோ காதல் சீரியலில் நடிப்பதற்கு முக்கியமான காரணம் இயக்குர்ன் கருணா குமார் மற்றும் எழுத்தாளர் காதர் பாபு அவர்கள் தான். அவர்கள் சீரியலின் கதையை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. அது என்னுடைய கதை “குடிகார கணவன் தன்னுடைய மனைவியை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அவளை துன்புறுத்துகிறார். இதனால் அந்த பெண் ஆண்களை வெறுக்கிறாள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு பையன் அறிமுகமாகிறான். அவனுடன் தவறு செய்ய விரும்பாவிட்டாலும் தவறு செய்ய வேண்டும்

-விளம்பரம்-

ஒரு பெண் தன்னுடைய ஆசைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதையும், கணவன் தன் மீது கவனம் செலுத்தாவிட்டால் அந்த பெண் வீட்டில் எப்படி நடந்து கொள்வார் என்பதையும் தத்ரூபமாக என்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் அறிவார்கள். சீரியலின் கதை உண்மையான நிகழ்வுகளுக்கு நெருக்கமாக இருப்பதினால் நான் நடித்தேன். அதன் மூலம் நல்ல செய்தி பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். எனவே அந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வது முக்கியம் என்பதை நான் உணர்தேன்.

உண்மையான மற்றும் எதார்த்தமான, கடினமான கதாபாத்திரமாக இருந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் ஆழமாக இருக்கிறது என்பதினால் தான் இப்படி விமர்சனங்கள் வருகிறது. கதையை கேட்ட பிறகு நானும் அப்படித்தான் உணர்ந்தேன். அதனால் தான் இந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று என்னால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை நடிகை சனா.

Advertisement