மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 90 காலகட்டத்தில் மக்கள் வெளியாகி பிரபலமான சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது.
இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கி இருந்தார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை இந்த சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐந்து சகோதரிகளின் வாழ்க்கை கதை தான் மெட்டி ஒலி சீரியல். மேலும், இந்த தொடரை இயக்கிய திருமுருகன் அவர்கள் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் முடிந்தும் இரண்டு மூன்று முறை மறுஒளிபரப்பும் செய்துவிட்டார்கள். அப்போதும் இந்த சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
மெட்டிஒலி சீரியல்:
இதனால் மெட்டி ஒலி 2 எடுங்கள் என்று கேட்டு இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக மெட்டி ஒலி சீரியல் நடிகைகள் ஒன்றாக சந்தித்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதோடு மெட்டி ஒலி முதல் பாகத்தை சினி டைம் நிறுவனத்தின் சார்பில் சித்திக் தயாரித்து இருந்தார். மெட்டி ஒலி தொடருக்கு பின்னர் ‘திரு பிக்சர்ஸ்’; என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்கள் .
மெட்டி ஒலி 2 குறித்த தகவல்:
அதோடு இந்த தயாரிப்பில் விரைவில் ஒரு சீரியலையும் தயாரிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. எனவே ‘மெட்டி ஒலி’ 2 வரும்பட்சத்தில் அந்தத் தொடரை இந்த நிறுவனமே இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், திருமுருகன் இயக்குவாரா? என்ற கேள்வி எழுந்தது. மேலும் , இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவிருக்கிறது என்கிற தகவல் சில மாதங்களாகவே சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
மெட்டிஒலி 2 குறித்த அப்டேட்:
இந்நிலையில் மெட்டி ஒலி 2 தொடரின் ஷூட்டிங் கூடிய விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தொடரை இயக்குனர் திருமுருகன் இயக்கவில்லை. அவருக்கு பதில் மெட்டி ஒலி தொடரில் அவருடன் அசிஸ்டென்ட் இயக்குனர் ஆகப் பணிபுரிந்தவர் தான் இந்த இரண்டாவது பாகத்தை இயக்க இருக்கிறார். அதே போலமெட்டி ஒலி தொடரின் முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்களுள் சிலர் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.