மெட்டி ஒலி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..!

0
1112
mettioli

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் 850 எபிசோடுகளை கடந்து சன் டிவியில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையையும் பெற்றது.

mettioli vijayaraj

இந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த விஜயராஜ் திடீர் மாரடைப்பால் கலமாகியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை பூர்விகமாகக் கொண்ட இவர் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும், எம்டன் மகன் படத்திலும் நடித்திருந்தார்.

இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் தீபாவளியை கொண்டாட தனது சொந்த ஊரான பழனிக்குச் சென்றுள்ளார். அங்கு நேற்றிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

நடிகர் விஜயராஜ்ஜின் மறைவு தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று அவரது உடலை பழனியில் இருந்து சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருவதாக விஜயராஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.