சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உமாவின் உடல், கதறி அழுத மெட்டி ஒலி சீரியல் பிரபலங்கள். வீடியோ இதோ.

0
14257
viji
- Advertisement -

90ஸ்ஸின் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த முக்கிய நடிகை காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்தனர். சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ போன்ற சீரியல்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : கொளுத்திப் போடும் பிரியங்கா – முகத்திற்கு நேராக சொன்ன போட்டியாளர்.

- Advertisement -

13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவரை, திருமணத்துக்குப் பின்னர் சீரியலில் பார்க்க முடியவில்லை. இறுதியாக விஜய் டி.வி-யின் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படி ஒரு நிலையில் இவர் இன்று காலமாகி இருக்கிறார். காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்த உமா கடந்த சில காலமாகமே உடல் நலக் குறைவால் பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவரது கணவர் ஒரு கால்நடை மருத்துவர். மேலும், கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய் இன்று காலமானார். அவருக்கு வயது 40. விஜியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கே இருந்த மெட்டி ஒலி பிரபலங்கள் விஜியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

-விளம்பரம்-
Advertisement