90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத மெட்டி ஒலி சாந்தியா இது. இப்போ எப்படி இருக்கார் ?வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

0
42229
Meti-oli-shanthi
- Advertisement -

அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடன இயக்குனர் சாந்தி. பொதுவாக சீரியல் நடிகர் நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவார்கள். ஆனால், சீரியலில் வந்த பாடல் மூலம் பிரபலம் அடைந்தது சாந்தி மாஸ்டர் தான். அதிலும் 90 ஸ் கிட்ஸ் இந்த பாடலை பார்ப்பதற்காக 9 மணி ஆனதும் ஓடிய தருணங்களை மறக்க முடியாது. சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ரித்திகா திருமணத்தில் சாந்தி மாஸ்டர் தனது மகன் மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
சமீபத்தில் நடைபெற்ற ஸ்ரித்திகா திருமணத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் சாந்தி

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் `கூகை திரைப்பட இயக்கம்’ நிகழ்ச்சியில், சினிமா நடன இயக்குநர் சாந்தி கலந்துகொண்டு பேசினார். அதில், சினிமா துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து தன் அனுபவங்கள் வாயிலாகப் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டி பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த பேசி இருந்த அவர், நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அதனால வேலை வாய்ப்புக்கு நான் கஷ்டப்படலை. 13 வயசுல சினிமாவுல, குரூப் டான்ஸரா சேர்ந்தேன். 

- Advertisement -

குரூப் டாண்டசரா ஆன பின்னர் தொடர்ச்சியா 16 மணிநேரமெல்லாம் வேலை செய்திருக்கேன். குடும்பக் கஷ்டத்துக்கு அப்படியெல்லாம் வேலை செய்தாலும், அதுக்காக நான் கவலைப்படலை. என்னதான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும், ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில்தான் வருமானமும் கிடைக்கும். `நான் அசிஸ்டென்ட் மாஸ்டரா இருந்தப்போ, `உங்க திறமைக்கு மாஸ்டர் ஆகிடுங்க’ன்னு பல ஹீரோக்களும் இயக்குநர்களும் சொன்னாங்க.

சாந்தி
தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சாந்தி

ஆனா, அப்படிச் சொன்ன யாருமே நான் டான்ஸ் மாஸ்டர் ஆன பிறகும்கூட வாய்ப்பு கொடுக்கலை. அப்படிச் சொன்னவங்க வீட்டுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போய் வெட்கத்தைவிட்டு வாய்ப்புக் கேட்டிருக்கேன். அப்போதும் ஒருவரும் மாஸ்டராக எனக்கு வாய்ப்புக் கொடுக்கவே இல்லைங்கிறதுதான் பெரிய கொடுமையும் காமெடியும். இப்படி ரொம்பக் கஷ்டப்பட்டு, 12 வருஷம் கழிச்சுத்தான் என் சொந்தத் திறமையால் டான்ஸ் மாஸ்டர் ஆனேன் என்று கூறி இருந்தார்

-விளம்பரம்-
Advertisement