சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள்.
ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள்.
இதையும் பாருங்க : ம க பா ஆனந்த் மற்றும் அவரின் மனைவியுடன் VJ சித்ரா. பலரும் பார்த்திராத புகைப்படம்
இந்த சீரியலில் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேவதி பிரியா, மெட்டி ஒலி சீரியலுக்கு பின்னர் ஒரு சில சீரியல்களில் நடித்த இவர் கோலங்கள், நிம்மதி, கிரிஜா எம் ஏ போன்ற சீரியல்களில் நடித்த இவர் பின்னர் தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கமல் நடித்த ‘ராஜ பார்வை’ என்ற படத்தின் டைட்டிலில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் நாம் இருவர் நமக்கிருவர் ராஷ்மி ஜெயராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இத்தொடரில் முனாஃப் ரஹ்மான் ஹீரோவாக நடிக்கிறார். இத்தொடரில் மெட்டி ஒலி நடிகை ரேவதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.