மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி காலமான செய்தி சோசியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பிப் பார்த்து ரசித்த சீரியல் மெட்டி ஒலி. அதிலும் அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றும் மக்கள் மத்தியில் கவர்ந்து வருகிறது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது மட்டும் இல்லாமல் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் உமா மகேஸ்வரி. இவர் சீரியலில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். இவரது கணவர் கால்நடை மருத்துவர். சில மாதங்களாகவே உமாவுக்கு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் இவர் ஈரோட்டில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தும் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உமா உயிரிழந்தார்.
இதையும் பாருங்க : ரியோ பொண்ணா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார் பாருங்க. அவரே பகிர்ந்த புகைப்படம்.
இவருக்கு தற்போது 40 வயதுதான் ஆகிறது. மேலும், இவரின் இறப்பு குறித்து சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். உமாவின் இறப்பு குறித்து சோசியல் மீடியாவில் பல்வேறு வதந்திகளும் கருத்துக்களும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மெட்டி ஒலி சீரியலில் உமாவுடன் நடித்த நடிகை சாந்தி அவர்கள் உமாவின் இறப்புக்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, உமாவை எனக்கு மெட்டி ஒலி சீரியலுக்கு முன்னாடி இருந்தே தெரியும். அவள் இறந்த தகவல் என்னால் தாங்க முடியவில்லை.
உமாவின் இறப்பு குறித்து நான் அவருடைய அக்கா வனஜாவிற்கு கால் பண்ணி பேசினேன். அப்போது வனஜா என்னிடம் அவளுக்கு மஞ்சகாமலை பிரச்சனை இருந்தது. அதற்காக அவள் ஈரோட்டுக்கு டிரேட்மெண்ட்காக வந்திருந்தாள். ட்ரீட்மென்ட் பண்ணிய பிறகு நல்லா தான் இருந்தாள். பின் திடீரென்று இறந்துவிட்டால். என்ன என்று எங்களுக்கு புரியவில்லை என்று அவர் கூறினார். இது என்னால் தாங்க முடியவில்லை என்று சொன்னார். போன வருஷம் சித்ரா, என் மகன் இழப்பில் இருந்தே என்னால மீள முடியல இப்போ உமா இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.