கலைஞர் கருணாநிதி என்ற பெயரை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் அரசியலிலும் சினிமாத்துறையில் சரி அவர் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. இந்நிலையில் மு.கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக தன்னுடைய 94 வயதில் காலமானர். அவருடன் பழகியவர்கள் பலர் கருணாநிதியுடன் இருந்த அனுபவத்தை அவ்வபோது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தான் கருணாநிதி சிறையில் இருந்த போது அவருக்கு காவலாக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார்.
அவர் கருணாநிதி சிறையில் இருந்த போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் “கருணாநிதிக்கு கடுங்காவல் தண்டனை கொடுத்த போது அங்கு காவலராக இருந்தேன். இப்படிபட்ட நிலையில் கருணாநிதிக்கு கடுங்காவல் தண்டனை என்பதினால் அவருக்கு உடை மற்றும் சிறைக்குள் வேலை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். எனவே கருணாநிதிக்கு மாலை 4 மணியளவில் கைதியின் உடை கொடுத்தேன்
கைதி உடையில் கருணாநிதி :
இந்நிலையில் அடுத்தநாள் காலை கலைஞர் கருணாநிதியை பார்க்க வந்தவர்கள் இவரை கைதி உடையில் பார்த்து மிகவும் சோகமாகி சிலர் அழுதனர், சிலர் கத்தினர் அந்த இடமே பதர்ட்டமாக இருந்தது. அதனை பார்த்த நான் “உங்களுக்கு இந்த உடை வேண்டாம் அனைவரும் வருத்தப்படுகின்றனர் நீங்கள் உங்கள் உடையிலேயே வாருங்கள் என கூறினேன், அதற்கு கருணாநிதி நான் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்து “அதெல்லாம் முடியாது நாளை பார்” என்று கூறினார்.
சர்ச்சையாகிய புகைப்படம் :
பின்னர் அடுத்த நாள் பத்திரிகை, நாளிதழ்கள், செய்தித்தாள்கள் என அனைத்திலும் “கைதி உடையில் கருணாநிதி” என்ற தலைப்புடன் கருணாநிதி கையில் தட்டும், குவளையும் வைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியானது. இதனால் பெரிய சர்ச்சை ஆகியது. உடனே எனக்கு அன்றைய டிஜிபி போன் செய்தி கலைனருக்கு கைதி உடையை கொடுத்தீர்களா? என்று கேட்ட, நான் ஆமாம் கடுங்காவல் தண்டனை என்பதினால் கொடுதேன் என கூறினேன். அதற்கு அவர் உடனே கருணாநிதியின் உடையை வாங்க சொன்னார்.
கைதி உடையை கொடுத்த கருணாநிதி :
அதற்கு பிறகு நானும் இது டிஜிபியின் உத்தரவு என்பதினால் கருணாநிதியிடம் சென்று கேட்டேன். ஏனென்றால் அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார் அவர் தான் டிஜிபியிடம் கேட்டிருக்கிறார். அப்போது நான் சென்று அண்ணா உங்க கைதி உடையை கொடுத்துடுங்கன்ன என்று கேட்டு, டிஜிபியும் வந்து கேட்டபின்னர் கொடுத்தார். ஆனால் அந்த புகைப்படம் எப்படி வந்தது என்று கேட்டேன், ஏனென்றால் அந்த காலத்தில் புகைப்படம் எடுக்க அரசாங்கத்திடம் அனுமதி வாங்கவேண்டும். அதோடு செல்போன் போன்றவை கிடையாது.
ஏற்கனக்கே எடுத்த புகைப்படம் :
இதனால் நான் அவரிடம் எப்படி நீங்க கைதி உடையில் இருக்க போட்டோ எடுத்திங்க என்று கேட்டேன். அதற்கு கருணாநிதி கூறினார் “நான் அந்த புகைப்படத்தை எங்களுடைய முரசொலி அலுவலகத்தில் பல நாட்களுக்கு முன்னர் எடுத்து வைத்திருந்தேன் அதுதான் அந்த புகைப்படம் என்று கூறினார்.
விடுதலையான 20000 பேர் :
இப்படி அந்த புகைப்படம் வெளியானதால் சர்ச்சை நிலவிய நிலையில் சிறையில் இருந்த 20000 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் கருணாநிதி என்னிடம் கூறினார் ”நீ எதற்கு அந்த கைதி உடை என்று கேட்டாயே தெரிகிறதா எதற்காக என்று என்னிடம் கூறினார். இதிலிருந்து தெரிவது இப்போது படத்தில் எடுக்கப்படும் காட்சிகளை அப்போதே உண்மையாக நிகழ்த்தி காட்டியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.,