எம் ஜி ஆர் – சிவாஜி முதல் விஜய் – அஜித் வரை. தமிழ் சினிமாவின் 8 டாப் ஹீரோக்களின் 50வது படம். வெற்றி தோல்வி.

0
1373
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் உச்சத்தில் கொடி கட்டி பறந்து வருகிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்தில் தொடங்கி தற்போது வரை பல நடிகர்கள் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி கொடிகட்டி பறந்த நடிகர்களின் 50வது திரைப்படம் வெற்றியா? தோல்வியா? என்ற பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர்களின் 50வது படத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

எம் ஜி ராமச்சந்திரன்:

- Advertisement -

புரட்சித்தலைவர் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமா உலகில் கலக்கியவர் எம்.ஜி.ஆர். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். இவருடைய 50வது திரைப்படம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த நல்லவன் வாழ்வான். இந்த படத்தை பி நீலகண்டன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் எம்ஜிஆர், ராஜசுலோச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் சரியாக ஓடவில்லை என்று தான் சொல்லணும்.

சிவாஜி கணேசன்:

-விளம்பரம்-

என்றென்றும் நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் சிவாஜி கணேசன். இவருடைய 50வது திரைப்படம் 1958ஆம் ஆண்டு வெளிவந்த சாரங்கதாரா. இந்த படம் தெலுங்கு நாடகத்தை மையமாக வைத்து தமிழில் எடுக்கப்பட்ட படம். இந்த படம் ராஜராஜ நரேந்திரன் மகன் சாரங்கதாராவின் கதை. மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ரஜினிகாந்த்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50வது திரைப்படம் தமிழில் வரவில்லை. தெலுங்கில் தான் இவருடைய 50வது திரைப்படம் வெளியானது. அந்தப் படம் டைகர். இருந்தாலும் தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

கமலஹாசன்:

உலக நாயகன் கமலஹாசனின் 50வது படம் மோகம் முப்பது வருஷம். இந்த படத்தை முத்துராமன் இயக்கி இருந்தார். இந்த படம் மணியன் எழுதிய மோகம் முப்பது வருஷம் என்ற நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் கமல், சுமித்ரா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுத்தந்தது.

விஜயகாந்த்:

கேப்டன் விஜயகாந்தின் 50வது திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த நீதியின் மறுபக்கம். இந்த படத்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராதிகா, வடிவுக்கரசி, விகே ராமசாமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தாலர்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

பிரபு:

நடிகர் திலகத்தின் மகன் இளைய திலகம் பிரபு நடித்த 50வது படம் பூ பூவா பூத்திருக்கு. இந்த படம் 1987ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சரிதா, அமலா நடித்து இருந்தார்கள். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது.

விஜய்:

தளபதி விஜய் அவர்களின் 50வது திரைப்படம் சுறா. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தமன்னா, வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

அஜித்:

தல அஜித்தின் 50வது திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். தயாநிதி அழகிரி தயாரித்து இருந்தார். இந்த படம் 2015ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. இந்த படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ராய்லட்சுமி, அஞ்சலி, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்திருந்தது.

Advertisement