எம் ஜி ஆரின் இலங்கை மற்றும் கேரளத்து வீடு – தற்போதும் அப்படியே இருக்கும் விஷயம். என்ன தெரியுமா ?

0
987
mgr
- Advertisement -

இலங்கையில் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பட்டி, சிட்டி என்று எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எம்ஜிஆர். இவருடைய முழு பெயர் மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன். இவர் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன். இவர் வழக்கறிஞராக பணியாற்றியிருந்தார். இவருடைய தாய் சத்தியபாமா.

-விளம்பரம்-

பல சூழ்நிலை காரண்களால் தான் எம்ஜிஆர் பெற்றோர் இலங்கைக்கு சென்றார்கள். பின் அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கே வந்து விட்டார்கள். எம்ஜிஆர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்து கொண்டு இருந்தார். பின் இவருடைய நடிப்பு திறமையினால் தமிழ் சினிமா உலகில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

எம்ஜிஆர் அரசியல்:

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டு இருந்திருந்தார். அறிஞர் அண்ணா கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின் அதிமுக கட்சியை உருவாக்கி தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தார்.

எம் ஜி ஆரின் கேரளத்து வீடு

முதலமைச்சரான எம்ஜிஆர்:

பின் இவர் அரசியலில் பல சாதனைகள் புரிந்து இருக்கிறார். தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும், இறக்கும் வரை முதலமைச்சராகவும் இருந்து சென்றவர். நடிகராக இருந்த போதும், அரசியல்வாதியாக இருக்கும் போதும் சரி பலபேருக்கு பல உதவிகளை எம்ஜிஆர் செய்து இருக்கிறார். நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து சென்ற தியாக செம்மல் எம்ஜிஆர் என்று சொல்லலாம். இன்றும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

-விளம்பரம்-

எம்ஜிஆர் சாதனை:

சொல்லப்போனால், சினிமா என்ற ஒன்று இவருடைய காலத்திலிருந்து தான் தொடங்கியது. தற்போது இருக்கும் நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறார் எம்ஜிஆர். தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இப்படி இவருடைய சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிலையில் எம்ஜிஆர் வீட்டின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எம்ஜிஆரின் இலங்கை வீடு:

அதாவது, நடிகர் எம்ஜிஆர் அவர்கள் இலங்கையில் கண்டி என்ற இடத்தில் வாழ்ந்திருந்தார். அங்கு அவர் வசித்த வீட்டின் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வாழ்ந்த போது எப்படி இருந்ததோ அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் அந்த வீடு இப்போதும் இருக்கிறது. இலங்கையில் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement