தன்னுடைய வீடியோவை பிளாக் செய்த பாகிஸ்தான் அரசு – மியா கலீபா கொடுத்த பதிலடிய பாருங்க.

0
12049
mia
- Advertisement -

தன்னுடைய டிக் டாக் கணக்கை தடை செய்த பாகிஸ்தான் அரசுக்கு மியா கலீபா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். ஹாலிவுட்டில் இருந்து எத்தனையோ ஆபாச நடிகைகள் உலக அளவில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் உலகளவில் அறியப்பட்ட ஆபாச நடிகைகள் என்றால் அது சன்னி லியோன் மற்றும் மியா ஆபாச நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு அடுத்து பார்ன் வலைத்தளத்தில் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை மியா காலிஃபா தான்.

Image

என்னதான் ஆபாச நடிகையாக இருந்தாலும் கடந்த ஆண்டு தனது லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு தன்னுடைய கண்ணாடியை ஏலம் விட்டு உதவி செய்தது முதல் சமீபத்தில் இந்திய விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தது வரை மியா கலீபா சில சமூக பொறுப்புகளையும் கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் மியா கலீபாவின் டிக் டாக் கணக்கை 3-வது முறையாக பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் எந்தவொரு அறிவிப்பும் விடுக்காமல் மியாவின் டிக்டாக் கணக்கை தடை விதித்துள்ளது. 

இதையும் பாருங்க : அந்த ஸ்கூலோட முன்னாள் மாணவன்றதோட, ரெண்டு பொம்பள புள்ளைக்கு அப்பாவா – PSBB பள்ளி சர்ச்சை குறித்து அஸ்வின் காட்டம்.

- Advertisement -

. மியா கலிஃபாவின் டிக் டாக் கணக்கை 3-வது முறையாக பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. கடந்த காலங்களிலும் இதுபோல் இரண்டு முறை மியா கலீஃபாவின் டிக்டாக் கணக்கை தடை செய்து பின்னர் அதனை விடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு. “ஒழுக்கக்கேடான மற்றும் நெறிமுறையற்ற” வீடியோக்கள் தடை செய்யப்படுவதாக அதற்கு விளக்கமும் அளித்திருந்தது. மியாவை டிக்டாக்கில் 22.2 மில்லியன் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் மூன்றாவது முறையாக மியா கலிஃபாவின் டிக் டாக் கணக்கை பாக்கிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.

இவரின் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதை மியாவின் ரசிகர் ஒருவர் தான் அவருக்கு ட்விட்டர் மூலம்தெரிவித்து இருந்தார். இதற்கு ட்விட்டர் மூலம் பதில் அளித்தார் மியா. அதில், “எனது டிக்டாக் கணக்கை நாட்டிலிருந்து தடை செய்ததற்காக பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுங்கள். பாசிசத்தைத் தவிர்க்க விரும்பும் எனது பாகிஸ்தான் ரசிகர்களுக்காக, எனது அனைத்து டிக்டாக் வீடியோகளையும் இப்போதிலிருந்து ட்விட்டரில் பதிவிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement